மெனிற் கொள்ளவும் பொருந்தாதெனின் தள்ளவும் உரியர். இது தவலருந் தொல்கேள்வியான் வருவதன்று. ஆதலால், பதிப்பிப்பவர்க்கு யான் ஊகித்ததே சிறந்ததென்று தோற்றின் மறுபதிப்பில் இளவேயிளியென்று வெளிவருதலுங்கூடும். அவர்கள் பதிப்பித்தவற்றுள் முற்பதிப்புக்கு மாறாகப் பிற்பதிப்பிற் சில இருந்தற்கு இஃதும் ஒரு காரணமென்க. அஃது அவர்கள் ஆராய்ந்து பதிப்பிக்கும் பல நூலுள்ளும் காணப்படும். இப்பெயரின் முன்னுள்ள பேய் மகளென்பது பேயென்பானின் மகள், அல்லது பேயென்பாளின் மகள் என்று 1பொருள்படும். பேயென்பது பேயாழ்வாரைக் குறிக்குங்கால் ஆண்பாலையும் காரைக்காற் பேயாரைக் குறிக்குங்கால் பெண்பாலையும் உணர்த்தி வருதலை நோக்குக. ஒரு பெண்ணின் பெயருக்கு முன் ஈன்றார் பெயரைப் புணர்க்குமிடத்துத் தாயார் பெயரைப் புணர்த்தியதாக ஒன்றும் விளங்காமையானும் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், கழார்க்கீரனெயிற்றியா ரென்பவை முதலியவற்றால் தகப்பனார் பெயரைப் புணர்த்துவ துண்டென்பது அறியப்படுதலானும் பேயென்பானின் மகளென்று பொருள் கொள்ளலாமென்று தோற்றுகிறது. இவராற் பாடப்பெற்றவர் சேரர் மருமானானால் இவர் தம்பியின் பெயரோடு சேரமானென்பது யாண்டும் காணப்படவில்லையே யெனின், சேரமானென்பது சேரநாட் டரசுரிமை பெற்றவர்க்கே சிறப்பாக வழங்கப்படுவதென்றும் பெறாதார்க்கு வழங்கப்படுவ தன்றென்றும் அவ்வுரிமையைப் பெற்றவர் இவரென்றும் பெறாதவர் அவரென்றும் ஊகிக்கவேண்டியதா யிருக்கிறது. இவர், மக்கள் இவ்வாறொழுகவேண்டும் இவ்வாறொழுகக் கூடாதெனப் பொதுவான நீதிகளை அறிவித்தலால் அறநூலிலும் இன்வாறே அரச நீதிகளையும் அமைச்சு தூது ஒற்று போர் முதலியவற்றையும் பற்றிக் கூறுதலால் பொருணூலிலும் நானானூற்றுள் அகத்தனவாகிய முந்நானூறு இந்நூல் இவற்றில் இன்பத்தைச் சுவைபட அமைத்திருத்தலால் காம நூலிலும் சிறந்த அறிவுடையவரென்பது விளங்கும்.
1 வேறு பொருள் கூறுவாருமுளர்.
|