- 29 -

சண்டகருமன் தேடிச் சென்றபோது

அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்

23. ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந்
  தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச்
  சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்
  மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.

(இ-ள்.) ஆயிடை-அப்பொழுது, (அந்நகர்ச்சோலையின் கண்), மாயம் இல் - மாயம் முதலிய குற்ற மில்லாத, குணக்குன்று அன்ன - நற்குணங்களால் மலையொத்த, மாதவர்க்கு இறைவன் - அரியதவம்புரியும் முனிவர்களுக்குத் தலைவரும், தூய மாதவத்தின் மிக்க - தூய்மையான அருந்தவத்தில் மிக்கவருமாகிய சுதத்தன் - சுதத்தாசாரியரென்பவர், அருந்தவர் ஐஞ்ஞூற்றுவர்களோடும்-அரியதவஞ் செய்யும் ஐந்நூறு முனிவர்களுடன், உபாசகர் தொசையுஞ் சூழ - சிராவகர் கூட்டமும்(தம்மைச்) சூழ்ந்துவர, சேயிடைச் சென்று - நெடுந்தூரஞ்சென்று, ஓர் தீர்த்தவந்தனை செய்ய - ஒப்பற்ற தீர்த்தஸ்தானங்களை வழிபடும் பொருட்டு,  செல்வோன் - செல்பவராய், வந்தான் - வந்தார்.(எ-று.)

நற்குணங்கள் நிறைந்த சுதத்தாசாரியர், ஐந்நூறு நிர்க்ரந்த முனிவர்களும், சிராவகர்களும் ஆகிய சங்கமுடன் அவ்விராசமாபுரத்து வழியாக வந்தாரென்க.

ஓர் உடை உடுத்தவர் - மனைதுறந்து தவவேடம் பூண்ட சிராவகர் எனவும், உபாசகர் எனவும் வழங்கப்படுவர்; (விவரம், ஸ்ரீபுராணம். சீதளர். 229 ஆம்-பக்கத்தில்காண்க) உடையே உடுக்காதவர் - திகம்பரரெனவும், நிர்க்ர்ந்த  தபோதனர் எனவும் வழங்கப்படுவர். அவரையே ஈண்டு அருந்தவர் என்றார். மாயமில் குணக்குன்றன்னவரும், மாதவர்க்கிறைவரும் தூயமா தவத்தின் மிக்கவருமான சுதத்தர் என்க.  உபாசகர் மிகப் பலராதலின், ‘உபாசகர் தொகையும்‘ என்றார். தீர்த்தவந்தனை யென்பது-நற்கதி யடைந்த நற்றவர், கைவல்யமடைந்த தீர்த்