‘என்ற அருங்கலச்செப்பின்படி
மனைதுறந்த சிராவக ரெனவறிக. தம் சங்கத்துள்ளாரைச் சிட்சிப்பதும் இரட்சிப்பதும்
தலைவர்கடமை யாதலின், ‘சரிகைபோகி நம்மிடைவருக‘ என்றார். வம்மின், ஏவற்பன்மை.
நற்றவற்றொழுது, இரண்டாம் வேற்றுமைத் தொகை.
(22)
இளைஞர்
சரிகை செல்லுதல்
27. |
வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை
கலனு மின்றாய் |
|
வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார் |
|
கொள்ளிய லமைந்த கோலக் குல்லக
வேடங் கொண்ட |
|
வள்ளலு மடந்தை தானும் வளநகர்
மருளப் புக்கார். |
(இ-ள்.) வள்ளிய மலரும்-நெருங்கத்தொடுத்த
மலர் மாலையும், சாந்தும் - கலவைச் சாந்தும், மணி புனை கலனும் - மணிகள் பதித் தியற்றிய
அணிகலன்களும், (ஆகிய இவற்றில் எதுவும்), இன்றாய்- இல்லாததாகி, வெள்ளியதுஉடை ஒன்றாகி
- வெள்ளை ஆடை ஒன்றுமாத்திரம் (உடுக்குமாறு) உளதாகி, வென்றவர் உருவம் - ஐம்பொறிகளையும்
வென்ற இறைவனின் உருவத்தை, ஏலார் - ஏலாதவராய், கொள் இயல் அமைந்த - தாம் கொண்ட
இல்லறவியலுக்கு (ஏற்ப) அமைந்த,
கோலம் - அழகிய, குல்லக வேடம் - க்ஷுல்லக வேடத்தை, கொண்ட - மேற்கொண்ட, வள்ளலும்
- அபயருசியும் , மடந்தை தானும்-அபயமதியும், வளநகர் மருள - அவ் விராசமா புரத்திலுள்ளார்
கண்டு வியப்பெய்துமாறு, புக்கார் - புகுந்தார்.
மலருஞ் சாந்தும் கலனும் நீத்து,
தூயவெள்ளாடை ஒன்றைமட்டும் உடுத்த இளைஞரிருவரும் சரிகைக்காகச்செல்வாராயினர் என்க.
இனி, புக்கார் என்பதனை முற்றெச்சமாக்கி,
புகுந்து என்ற பொருள் கொண்டு, முன்வருஞ் செய்யுளில் (யசோ. 28-இல்) நடந்தனர் என்பதனோடு
இயைத்துக் கூறினும் அமையும்.
|