வள்
- நெருக்கம் க்ஷல்லக வேடங் கொண்டவர் ஒராடைக்குமேல் உடுக்கலாகா தாகலின்,
‘வெள்ளியதுடை ஒன்றாகி‘ என்றார். ஆடை முதலியன ஒன்றும் இன்றி இயற்கையாக அமைந்த
உருவத்தையே, ‘வென்றவர் உருவம்’
என்றார். ‘வென்றவருருவம் ஏலார’
என்றது, இறைவ ருருவம் ஏற்கும் ஆற்றலின்றி ஒராடையுடுத்து க்ஷுல்லகவேடம் மேற்கொண்ட
இவ் வபயருசியையே குறிக்கும் எனக்கொள்க; தீசை பெற்ற மகளிரும் உடை இலாதிருத்தலில
ராகலின். வென்றவர் - ஐம்பொறிகளையும் புலன்களிற் செல்லவொட்டாது
தடுத்து வென்றவர்; ஜினர். ‘அருகனதுருவ மில்லார் ‘ என்று (மேரு.75-ல்) கூறியிருப்பது
காண்க. இயல் - இல்லறம் துறவறம் என இரண்டு. இவ்விடத்திற்கேற்ப இல்லறவியல் என்று பொருள் கொள்ளப்பட்டது.
குல்லக-க்ஷுல்லகம்
என்ற வடமொழியின் திரிபு. ஒராடை மட்டும் உடுத்து அணிகலன் முதலியவற்றை நீக்கித்
தூய எண்ணத்துடன் தவவேடம் கொள்வது. க்ஷுல்லகவேடம் எனப்படும். அவ்வேடமுடையார் க்ஷுல்லகர்
எனப்படுவர். இவர்கள் தவவேடம் பூண்டவராயினும் அப்பிறப்பிலேயே முக்தி யெய்துவதற்குக்
காரணமான ‘வென்றவருருவம்’
ஏலாதவ ராதலின், இல்லறவியலினராவர். ஆயினும் இவர்கள், பரம்பரையினால் முக்தி
யெய்துவதற்குக் காரணமாகிய தவவேடங் கொண்டவராகலின், மேன்மையுடையராகக் கூறப்படுவர்.
என்னையெனின், அறிவுவளர்ச்சிக்கு ஏற்பப் பலவாறு கல்விநிலையங்களில் பல வகுப்புக்கள்
ஏற்பட்டிருப்பதுபோலக் குணங்களையும் செயல்களையும் அனுசரித்து மக்களின் நிலை பதினான்குவகையாக
ஏற்பட்டுள்ளன. அவை குணஸ்தானம் என்று வழங்கப்படும். அப்பதி னான்கனுள்*ஒன்றுமுதல் ஐந்துவரை இல்லறத்தாரின்
* |
|
|
1.
மித்தியாதிருஷ்டி,
2. சாசாதனன்
3. மிஸ்ரன்,
4. அசம்யதன்,
5. தேசசம்யதன்,
6. பிரமத்தன்,
7. அப்பிரமத்தன்,
8. அபூர்வகரணன்,
9. அநிவிருத்திகரணன்.
10. சூட்சும சாம்பராயன், |
|