கூறுவர். இப் பதினொருவகைகளும்
பதினொரு சிராவக நிலையெனக் கூறப்படும். இவற்றுள் பதினொன்றாவது நிலையிலுள்ளவர்களையே
ஓராடையுடன் தவவேடம் கொண்ட க்ஷுல்லகர் என்பர். இவர்களை உத்திஷ்டபிண்ட விரதர் எனவும், அந்நிலையை
உத்திஷ்ட பிண்ட விரதம் எனவும், கூறுப. உத்திஷ்ட பிண்ட விரதியர், தமக்கென்று
இல்லத்தில் தயாரித்த உணவை உண்ணாது, முனிவர்களைப் போலச் சரிகை சென்று முறைப்படி
உணவேற்பவர்.
இவ் விளைஞரிருவரும் தவவேடம் கைக்கொள்ளுங்காலத்தில்
இவர்களின் ஆசிரியராகிய சுதத்தாசார்யர் இவர்களை நோக்கி, ‘ஆற்றல தமையப்பெற்றா
லருந்தவமமர்ந்து செய்மின், சாற்றிய வகையின் மேன்மேல் சையமாசையமத்திற், கேற்ற
வந்நிலைமை தன்னை யிது பொழுதுய்மின’ என்று (யசோ 308-ல்) கூறியிருப்பதனால்,
இவர்கள் மேற் கூறிய தேசசம்யதர் எனப்படும் சம்யமா சம்யம*விரதத்தினர் என்பது
அறியப்படும். இவர்கள் பதினொன்றாவது நிலையினரான க்ஷுல்லகர் என்றபொருள்பட, இவர்களை,
வாதிராஜ ரியற்றிய யசோதரசரிதத்துள், ‘விரதம் ஏகாதச தரம்’, ‘நிர்க்கதம் க்ஷுல்லக த்வயம்‘
என்று கூறியிருப்பது காண்க,
தம்மைக் கொல்லக்கருதிய மாரிதத்தனுக்கு
உறுதியை நல்கும் அறமொழி நுவலுதலின் அபயருசியை ஈண்டு, ‘வள்ளல்‘
1 என்றார். நகர்-நகரத்திலுள்ளவர்களைக்
குறிப்பதனால் இடவாகுபெயர். ‘நகர்மருளப் புக்கார’ என்றதனால் மாரியின் தொண்டர்
தவிர மற்றையோர் நகரத்தி லிருந்தனரென அறியலாகும்.
குணஸ்தானம் முதலியவற்றைப் பதார்த்தசாரம்
கோமடசாரம் முதலிய நூல்களுட் பரக்கக் காணலாகும்.
*
1
|
மேரு.
475
சீவக. 450
பூர்ண. யசோ. சரிதம். 1-69,70. |
|