- 43 -

கோயிலிருந்த, திசைமுகம் அடுத்துச்சென்றான்-திக்குநோக்கிச் செல்வானாயினன்; இளையரும் - இளையோராகிய அபயருசியும் அபயமதியும், இன்று இனையது பட்டது என்று-இன்று இந்நிலைமை ஏற்பட்டது என்று, எண்ணினார் - பின்வருமாறு ஆலோசித்தனர். (எ-று.)

ஆலோசித்தவகையை மேல் 26-கவிகளிற் கூறுகின்றார்.

சண்டகருமன், இளைஞர்பால் இரக்கங்கொண்டும் மன்னனேவலால் வேறுவழியின்றியித், தானே சென்ற பற்றுதற்கு மனமின்றித் தன் ஏவலரைக்கொண்டு கைப்பற்றிச் சென்றானென்க.

சண்டகருமன், இளையோரது தூய துறவினுக்கும் இளமைச்செவ்விக்கும் அஞ்சினா னாயினும், மன்னன் ஏவலுக்கு ஈடுபட்டு உழையவரால் கைப்பற்றிச் சென்றானென்பார், “என... வவ்வி” என்றார்.  உழையவர் - ஏவலர்;தான் வந்தபோது தன்னுடன் அழைத்து வந்தவர். சண்டகருமன் முதலியோர் பேசிக்கொண்டதிலிருந்து, தங்களைப்பலியிடப் பிடித்தேகுகின்றனரென்று இளைஞர் அறிந்தனரென்பார், ‘இனையது... எண்ணினார்‘ என்றார்.  ஏ,   ஈற்றிசை. (26)

31.  வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித்
  தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல்
  அன்பினா லையன் றங்கை  யஞ்சுத லஞ்சி நெஞ்சில்
  தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான்1.

(இ-ள்.) மதியம் - முழுமதியானது, ஓர் மின்னொடு ஒன்றி -ஒருமின்னற்கொடியுடன் சேர்ந்து, தன்பரிவேடம் தன்னுள் - தன் பரிவேடத்தினுள், வருவதேபோல் - செல்வது போல, வன் சொல் வாய் மறவர்சூழ - கடுஞ்சொற்கூறும். மறவர்சூழ்ந்துவர, அன்பினால்-கருணையினால், ஐயன்- அண்ணனாகிய அபயருசி,

1 சொல்வான்.