- 42 -

கொண்டு - இளம்பருவத் (துத் தவவேடத்)தைக் கொண்டு குழைந்து - மெலிவடைந்து, இவண் வந்தது - இவ்விடத்து வந்தது, என்கொல் - யாது காரணத்தாலோ ?’  என்றான் - என்று (தனக்குள்) கூறிக்கொண்டான். (எ-று.)

இளைஞரைக் கண்ட சண்டகருமன், மனங்கலங்கி எண்ணினானென்க. இளமையில் மேற்கொண்ட துறவும்,வனப்பும் எத்துணைப் பகைமையுடையோரையும் அன்பும் அச்சமும் கொள்ளச் செய்யு மாதலின், ‘ அண்டல... நீரார்‘ என்றார் ‘செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச் சிறுவர்’ (அக. 66.) என்றது காண்க.

சண்டகருமன் மனங்கலங்கியதற்குக் காரணம், இனமைச் செவ்வியும் துறவுமே யென்க.  பகைவரே அன்பு கொள்வராயின், ஏனையோர்க்குக் கூறவேண்டா வென்க. நீரார்க்கண்டனன் - இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலின் ஒற்றுமிக்கது.  கலங்கா - கலங்கி; செய்யாவென்னும்வாய்பாட்டு வினையெச்சம்.  புண்டரீகம் - இங்குச் செந்தாமரை; திருமகள், செந்தாமரையில் வசிப்பவள்.  கொம்பு, கொம்பு போல்வாளுக்கு உவமையாகுபெயர். சண்டகருமனும் என்பதிலுள்ள ‘உம்மை’சிறப்பு.                               (25)

இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்

30.  எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல்
  தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்
  சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான்.
  இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே.

(இ-ள்.) என மனத்து எண்ணி-(சண்டகருமன் இவ்வாறு) தன்மனத்தே ஆராய்ந்து, இரங்கியும் - இரக்கங்கொண்டபோதிலும், மன்னன் ஏவல்தனை நெஞ்சத்து நினைந்து - வேந்தன்கட்டளையை நெஞ்சில் நினைந்து, தன் உழையவரின்-தன் ஏவலரால், அவர்கள் தம்மை-அவ்விருவரையும், வவ்வி-வலிதிற் கைப்பற்றிக்கொண்டு, சினம் மலிதேவி கோயில்-சினம் நிறைந்த உருவமுடைய சண்டமாரியின்