தூய வுணவு கொடுப்பார்களாயின்,
‘முறைப்படி ஏற்று உண்ணுவாம்‘ என்ற நியமமுடையவராதலின், ‘இல்லரவரெதிர்கொண்டீயின்
எதிர்கொளுண்டியருமாகி’ என்றார். எதிர்கொண்டீயாக்கல்
உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுவாம் என்ற நியமம் உடையார் என்பது இங்குப்பெறப்படும்.
நல்லற அமிர்து-சுதத்தாசாரியர் மொழிந்த அறவுரையாகிய அமிர்தம்; பிறவாநெறியாகிய
முக்திநெறிக்குக் காரணமாதலின் அறம் அமிர்தமெனப்பட்டது. அமிர்தம்-சாவாமை. ‘சாவாமருந்து’ என்றார்(குறள்.82-ல்) தேவரும்.
அறத்தை அமிர்தென்றலை, ஊட்டரும் அறவமிர்துலகமுண்டதே‘,* ‘அறவியான்றானும்
அறவமிர்தீந்தான’1
எனப்பலவிடத்தும் காணலாம். நல்லறவமிர்தம் என்பது உருவகம். பாதங்கழுவுதல், பாதபூசை
செய்தல், உச்சஸ்தானத்திருத்தல் தவிர மற்றவை உபாசகர்களுக்கும் உண்டு. (24)
மன்னவனேவல்
பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக்
கண்டு கலங்குதல்
29. |
அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத்
தஞ்சு நீரார்க் |
|
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க
லங்காப் |
|
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன்
மதனும் போன்று |
|
கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண்
வந்த தென்றான். |
(இ-ள்.) அண்டலர் எனினும் -
பகைவரேயாயினும், கண்டால் - நேரில் கண்டால், அன்புவைத்து - (பகைமை நீங்கி) அன்புகொண்டு,
அஞ்சும் - (தீங்குபுரிதற்கு) அஞ்சத்தக்க, நீரார்-தன்மையினையுடைய இளைஞரிருவரையும்,சண்டகருமனும்
- ‘கண்டனன் - கண்டான்; கண்டுமனங்கலங்கா
-கண்டு மனங்கலங்கி, ‘ (இவ்விருவரும்), புண்டரீகத்தின்கொம்பும் - தாமரையில் வாழுந்
திருமகளும், பொருவு இல்மன்மதனும் - ஒப்பில்லாமன்மதனும், போன்று - ஒத்து,
(மிக அழகிய வுருவத்துடன்), இளம்பருவம்,
*
|
சீவக. 3060. |
1 |
நீல. தரும.
118. |
|