- 40 -

வெறுப்பு, சோகம், அச்சம், அருவருப்பு என்பன.  நாணுதல்-இங்கு, அடங்குதல். எதிர்கோடலென்பது, நவபுண்யக்ரமத்தில் முதலது.  நவபுண்ய க்ரமங்களாவன;-முனிவர் உணவு உண்ணற்கு வரும்போது அவர்களை எதிர்கொள்ளல், உச்சஸ்தானத்தி லமர்வித்தல், பாதங்கழுவுதல், பாதபூசை செய்தல், வணங்குதல், மனச்சுத்தியுடைமை, வாசனசுத்தியுடைமை, காயசுத்தியுடைமை, ஆகாரசுத்தியுடைமையென்பனவாம்.

இதனை,

  “தொடிக்கையாற் றொழுது வாழ்த்திக்
      தூமணி நிலத்து ளேற்றிப்
  பொடிப்புனை துகிலி னீக்கிப்
      புகழ்ந்தடி கழீஇய பின்றை
  அடுத்தசாந் தகிலி னாவி
      யாய்மல ரருச்சித் தானார்
  கொடுப்பர்நா லமிர்த மூன்றிற்
      குணம்புரிந் தடங்கி னார்க்கே”

என்று (சீவக.2827,8.) சிந்தாமணியாசிரியர் கூறுவதனால் அறியலாகும்.

  “எதிர்கொள லிடநனி காட்டல் கால்கழீஇ
  அதிர்பட வருக்சனை யடியின் வீழ்தரல்
  மதுரநன் மொழியொடு மனம்மெய் தூயராய்
  உதிர்கநம் வினையென வுண்டி யேந்தினார்”

என்று (சீவக.2828-ன் உரையில்) நச்சினார்க்கினியர் கூறுவதும் ஈண்டு அறியத்தகும்.  தூய உணவாவன:-தேன்,    புலால், கள் முதலிய குற்றம் நீங்கியவைகளாம்.  இதனை ‘ஊனொடுதேனுங் கள்ளு மின்றிநன் றாய வுண்டி, தானுவந்து ,,,,,,,,,,ஈதல் தானமாம்‘  (மேரு.349.) என்ற வாமனமுனிவர் கூற்றா லுணரலாகும்.  இத்தூயவுணவினை வடநூலார் ஏஷணாதோஷம் முதலிய நாற்பத்திரண்டு குற்றங்களின் நீங்கிய பவித்திரவுணவு என்பர்.  விரிவு, ஸ்ரீபுராணத்துட் காண்க.