- 46 -

இவர்களால் அழியுமாயின் நாம் வருந்தவேண்டிய தென் ?‘ என்பான், ‘இவரின் எய்தி னங்கதற் கழுங்க லென்னை ‘ என்றான். உடலின்பற்றையே துறந்தவர் வேறு பற்றினையடையார் என்ற பொருள் தோன்றுவ தறிக. ‘மற்றுந் தொடர்ப்பாடெவன் கொல் பி்றப்பறுக்கலுற்றார்க்குடம் புமிகை‘ என்றார் (குறள் 345) தேவரும். அழுங்கல்-அச்சம் எனினுமாம். ‘ஜடப்பொருளான உடல், அறிவுகாட்சி மயமான நம் உயிரின் தன்மையாகாது‘ என்பான் ‘அது நமதன்று‘ என்றான். ‘உடம்பு நமதன்று‘ என்ற எண்ணும் பாவனை அனுப்ரேக்ஷை பன்னிரண்டனுள் அன்யத்வம் எனப்படும். அனுப்ரேக்ஷை பன்னிரண்டாவன;-1.  அநித்யம், 2. அசரணம், 3.சம்ஸாரம், 4. ஏகத்வம், 5.அன்யத்வம், 6. அசுசித்வம், 7.ஆஸ்ரவம், 8.ஸம்வரை, 9.நிர்ஜ்ஜரை, 10. லோகம், 11.போதிர் துர்லபம், 12.தர்மஸ்வாக்யானம் என்பன.  ‘சேதனமாலாவி யசேதனமாலிவ்வுடம்பு, ஆதலின் வேறாய அவ்விரண்டுஞ் சேர்தலினால், மன்னுமொன்றாய் விடினும் வாளுந்தடறும் போல், பின்னமெனவே பிரித்துணர்மின்‘ என்றார் (திருக்கலம்.72) உதீசிதேவரும்.  அங்கு, அசை.         (28)

33.  அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால்
  அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி்
  அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த
  நஞ்சன1 வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான்.

(இ-ள்.) அஞ்சினம் எனினும் - (வரக்கடவதாகியதுன்பங்களைக்குறித்து) அஞ்சினே மாயினும், அடைப-(நம்மைவந்து) சேருபவை, மெய்யே வந்து சேரும் - தப்பாமல் வந்து சேரும்; ஆனால்-அங்ஙனமாயின், அதனின்-அவ்வாறு அடைதலைக்குறித்து அஞ்சுதல்-அஞ்சுதலால், நமக்கு -, பயன் என்னை-பயன்யாது ?’  அதுவுமன்றி-அதுவேயுமன்றி, அஞ்சுதல் துன்பம் தானே-அஞ்சுவதும் துன்பமே, அல்லதும்-அது வன்றியும், அதனில்சூழ்ந்த - அவ்வச்சத்தால் நம் உயிரைச் சூழ்ந்த,

 

1 நஞ்சென,