- 47 -

நஞ்சு அன வினைகள் - விஷம்போன்ற தீவினைகள், நம்மை - நம்உயிரை, நாடொறும் நலியும்-எந்நாளும் வருத்தும், என்றான்-என்று கூறினான். (எ-று.)

நம்மை மரணம் முதலியன எய்துவது குறித்து அஞ்சினே மாயினும் அஃது தடைப்படாது வரும்; அஞ்சுவது துன்பத்திற்கும் தீவினைக்கும் காரணமாமேயன்றி நன்மையான பயன் சிறிதும் தாராதென்றன னென்க.

மரணம் முதலியவற்றிக்கு நாம் பயந்தே மாயினும், அம்மரணம் முதலியன தடைப்படாது எய்துவதோடு அவ்வச்சம் மீண்டும் தீவினைக்குக் காரணமாதலால், யாதுபயன் என்பான், ‘அஞ்சுத லதனின் என்னை பயன் நமக்கு‘ என்றான்.  இதனை, ‘மந்திரமு மாண்ட மணிகளு மாமருந்துந், தந்திரமுந் தாங்காக்குந் தன்மையவோ‘ என்று சீவசம்போதனை (104) கூறுவதனாலும் அறியலாகும். துன்பம் அச்சத்தாலேயே ஆகும் என்பான்,  ‘அஞ்சுதல் துன்பந்தானே‘ என்றான். ‘தான்‘ என்பது அசையெனினுமாம்.  அச்சத்தாலாம் வினை தீவினை யாதலின், ‘நஞ்சன வினை‘ என்றார்.  அடைப-அடைபவை; பலவின்பாற்பெயர்.                                          (29)

34.  அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந்
  தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்
  நல்லுயி்ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த1 தெல்லாம்
  மல்லன்மா தவனி னாமே2 மறித்துணர்ந் தனமு மன்றோ.

(இ-ள்.) அன்னை-அன்னையே, அல்லதும் - அதுவல்லாமலும், நின்னோடு-நின்னுடன், யானும்--முன்-முன்னர். அனேகவாரம்-பல தடவை, தொல் வினை துரப்ப ஓடி-பழவினை செலுத்தச்சென்று, விலங்கிடைச் சுழன்றபோழ்தில்-(மயில் முதலிய) விலங்கினங்களிற் பிறந்துழன்ற காலத்தில், நல்லுயிர் - பவ்ய ஜீவன்களாகிய நம்மை, நமர்கள் தாமே-நம் சுற்றத்தவர்களே, நலிந்திட-வருத்திட, விளிந்தது எல்லாம்-இறந்த அவையாவும், மல்லன் மாதவனின்-ஞானவளப்பமுள்ள சுதத்தாசார்யரால், நாம்-, மறித்தும் உணர்ந்த

 

1

விறந்த,
2 தவனின்யாமே.