னம் அன்றோ - (முற்பிறவிகளில்
நேரில் அறிந்ததேயன்றி இப்பிறவியில்) மீட்டும் கேட்டுணர்ந்தோமல்லமோ ?’
(எ-று.)
அன்னையே நீயும் யானும் பல தடவை
விலங்கிற்பிறந்து நம் சுற்றத்தினரே வருத்தத் துன்புற்றதை முன்னர், பழம் பிறப்புணர்வினால்
அறிந்ததே யன்றி, மட்டும் சுதத்த முனிகளாலும் அறி்ந்ததோ மென்றனனென்க.
அன்னை - ஈண்டு, தங்கையைக் குறித்தது,
அது-மர்புவழுவமைதி, இனி, முற்பிறவி யொன்றில் அபயருசி, (இக்காப்பியத்தலைவனான)
யசோதரனாகவும், அபயமதி அவன் தாய் சந்திரமதியாகவும் பிறந்திருந்ததைக் குறித்து
‘அன்னை‘ என்று கூறினானெனினுமாம். யசோதரனாக இருந்த பிறவியில் மாவினாற் செய்த
கோழியைப் பலியிட்டதனால் ஏற்பட்ட தீவினையை, ‘தொல்வினை‘ என்றும், அதனால் பலபிறவி
விலங்கினங்களிற் பிறந்ததை, ‘அநேக வாரந் தொல்வினை துரப்பவோடி விலங்கிடைச்
சுழன்ற போழ்தின்‘ என்றும், யசோதரனையும் அவன் தாயையும் அமிர்தமதி விஷம் ஊட்டிக்கொன்றதையும்
(யசோ. 146), யசோமதி சொக்கட்டான் பலகையாற் கொன்றதையும் (யசோ. 169). மற்றும்
நிகழ்ந்த பல செயல்களையும் உட்கொண்டு, நமர்கடாமே நலிந்திட விளிந்தது‘ என்றும்,
அகம்பனர் உபதேசமொழியைக் கேட்டிருந்த கோழிப்பிறப்பில் ஏற்பட்ட பழப்பிறப்புணர்வினால்
அறிந்து (யசோ. 248) மீண்டும் சுதத்த முனிகளால் அறிந்ததை (யசோ.306) ‘ மாதவனின்
யாமே மறித்துணர்ந்தனமன்றோ ? எனவும் கூறினார். இனி மறித் துணர்ந்தனம்
என்பதற்கு, சுதத்தாசார்யரால் அறிந்ததே யன்றி மீட்டும் நமக்கு எய்திய பழம்பிறப்புணர்வினால்
அறிந்துளோம். என்று பொருள் கொள்ளினும் அமையும். இதனை, ‘தவ வரசனருளாலே நீங்கிய
பவங்களை நினைந்தனருணர்ந்தார்‘ எனவும்,‘மைந்தனும் மங்கையாயபேதை.யம்
பிணையனாளும்பிறப்பினி துணர்ந்தபின்னர்’ எனவும் (யசோ. 294,306) கூறுவதனாலறியலாகும்.தொல்வினை-பழவினை; ‘ஊழ்வினை
துரப்பவோடி‘ என்றார் (சீவக.2765) திருத்தக்கதேவரும்.
|