சிலை-வில்; ஒர் அளவை. 24-அங்குலம்
கொண்டது ஒரு முழம் எனவும், நான்கு முழங்கொண்டது ஒருவில் எனவும் வழங்கும். இதனை,
|
‘அங்குலம் மறுநான் கெய்தி னதுகரம்
கரமோர் நான்கு |
|
தங்குதல்
தனுவென் றாகும் தனுவிரண் டதுவோர் தண்ட |
|
மிங்குறு
தண்டமான விராயிரங் குரோசத் தெல்லை |
|
பங்கமில் குரோச நான்கோர் யோசனைப்
பால தாமே‘ |
என்று கூறுவதனா லறிக.
நாம் வசிக்கும் பூமியின் கீழ்
ஏழு நரகங்கள் உள்ளன என்றும், அவற்றுள் மேலேயிருப்பது முதல்நரகம் என்றும், எல்லாவற்றிற்கும்
கீழேயிருப்பது ஏழாம்நரகம் என்றும், பல அடுக்குமாடிகளையுடைய வீட்டைப்போல அந் நரகங்கள்
ஒவ்வொன்றும் பல அடுக்குக்களையுடையன வென்றும், கூறுவர். அவ்வடுக்குக்களைப் புரை யென்று
வழங்குவர். அவற்றுள் முதல் நரகத்திற்குப் புரை பதின்மூன்றெனவும், முறையே இரண்டிரண்டு
குறைந்து ஏழாம் நரகத்தில் புரை ஒன்றே யெனவும் கூறுவர். இதனை, [ன்று
|
‘ஒன்று மூன்றைந்து மேழு மொன்பதும்
பத்தோடொ |
|
நின்ற
மூன்றோடு பத்து நிரயத்துப் புரைகள்மேன்மேல்‘ |
என்று (மேரு-937-ல் கூறுவத காண்க.
முதல்
நரகத்து முதற்புரையில் பிறக்கும் நரகர்களுக்கு உடம்பின் உயரம் மூன்று முழமாகும். முதல்
நரகத்துப் பதின் மூன்றாம் புரையில் பிறக்கும் நரகர் களுக்கு உடம்பின் உயரம்(7-13/16)
ஏழேமுக்காலே வீசம்வில். இது முறையே இரட்டித்த அளவாகச் சென்று ஏழாம் நரகத்துப்
பிறக்கும் நரகர்களுக்கு உடம்பின் உயரம் ஐந்நூறு வில் என்ப. அதாவது, நரகம் 1 இல்
716/13 2ல் 15-16/10 3ல் 31-1/4 4ல் 62-1/2 5ல் 125, 6ல் 250, 7ல் 500 வில்.
இவை ஒவ்வொன்றும் கீழ் கீழ் புரை யிலாகும். இவற்றையே, ‘முழமொரு மூன்றிற்றொட்டு...
எய்திய வுருவம்‘ என்றார், இதனை,
|