- 54 -

  ‘முழமூன்றுயர் வாமுத லாம்புரையின்
  முழமூன்றுவில் லேழ்விர லாறுளகீழ்
  எழுவாயிதைஞ் ஞூறுவில் லெய்தளவும்
  வழுவாதிறு தோறு மிரட் டியதாம்’    (மேரு.939)

என்ற செய்யுளா லறியலாகும்.  இந் நரகங்களின் புரைகள் ஒவ்வொன்றிலும் நாம் பலதடவை பிறந்தோம் என்பான் ‘நம்மொடு ஒன்றி ஒருவின உணரலாமோ’ என்றான். ‘நங்களை வந்துகூடி நடந்தன’, ‘பண்டு நாம் கொண்ட யாக்கை,‘ ‘பெற்றது’ என (யசோ. 38,39,40) வருமிடத்தும் இவ்வாறே பொருள் கொள்க.                                                  (33)

விலங்குகதி வரலாறு

38.  அங்குலி யயங்கம்1 பாக மணுமுறை பெருகி மேன்மேல்
  பொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு
  வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து
  நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ.

(இ-ள்.) மேனாள்-முற்காலத்தில், வெம் கனல் வினையின்-வெவ்விய நெருப்புப்போல வெதுப்பும் வினைகளினால், விலங்கிடை-விலங்கினங்களில், அங்குலி அயங்கம்பாகம்-ஒருகன அங்குலத்தினை எண்ணற்ற பாகஞ் செய்து அதில் ஒரு பாகமான, அணு-அணுவளவுள்ள மிகச்சிறிய உடலிலும், முறை மேன்மேல் பெருகி-முறையே உடலின் அளவும் பொறிகளும் மேன்மேலும் பெருக்கமுற்று பொங்கிய-(விலங்கினத்தில் மிகவும்) பருத்த உருவமான,

ஈரைஞ்ஞூறு புகை பெறும் முடை உடம்பு * ஆயிரம்

1

யங்கம்
*

விலங்கினங்களின் உருவம் சிறிதும் பெரிதுமாகப் பலவகைப்படும்; அவற்றுள் மீனினம் மட்டும்

  “கலைசுறா மீனேறென்ப காட்டிய மகர மாகுஞ்
  செலமுறு யானைமீனே திமில்பெறு மீனினாம"