- 63 -

இவ்வாசிரியரே கூறுவதனாலும் அறிக.  ‘மகுடகோடி‘என்றது, எண்ணற்ற தேவரை உணர்த்திற்று.  தேவர்களாய்ப் பிறந்திடினும் நிலைபெற்ற வின்பத்தினை யடையாதவராய் ஆயுள்முடிவில்மரண மெய்துவர் என்பதனை, தேவர்க்ளுக் கிறைவனான தேவேந்திரன்மீது வைத்து, ‘இமையவ ரிறைவரேனும்‘ என்றார்.  விபவம்-வாழ்வுக் குரிய செல்வம்.  உருவம் -  உடலின் உருவம்.  பொன்றல் - அழிதல்; தேவர்கள் மரண மடைவதற்குப் பதினைந்துநாள் முன்னரே உடல்நலம் முதலியன வாடித்துன்புறுவர் ஆதலின் ‘தளர்ந்தனர்‘ என்றார்.

“எல்லைமூ வைந்து நாள்க ளுளவென விமைக்குங் கண்ணும்
நல்லெழின் மாலை வாடு நஞ்சுடை யமிர் துண் டாரிற்
பல்பகற் றுய்த்த வின்பம் பழுதெனக் கவல்ப கண்டாய்”

என்றார் (சீவக. 2810) திருத்தக்கதேவரும்.  “இந்திர விபவமேனும் நின்ற தொன்றில்லை யர்£க்கும்” (மேரு.204) என்று கூறியது ஈண்டு ஒப்பிடற் பாலதாகும்.இறைவரேனும், உம்மை - உயர்வுசிறப்பு.                       (38)

43. மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்
தி்க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும்
அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்
ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே.

(இ-ள்.) வையத்து  - நிலவுலகின், மக்களிற் பிறவியுள்ளும் - மக்கட்பிறவியுள்ளும், மன்னர்தம் மன்னராகி -அரசர்க் கரசராய், திக்கு - எலாம் அடிப்படுத்தும்  - எட்டுத் திக்கிலுள்ள வேந்தரையும் தம் அடிக்கீழ்ப் பணியச்   செய்யும், திகிரி - சக்ர ரத்தினத்தைக் கொண்ட,  அம்செல்வரேனும் - அழகிய விபவங்களையும்பெற்றவராயசக்கிரவர்த்திகளாயினும், அக்குலத்து உடம்பு தோன்றி -அவ்வுத்தமகுலத்துப் பிறந்து, அன்றுதொட்டு இன்றுகாறும் - அன்றுமுதல் இன்றுவரையிலும், ஒக்க நின்றார்