கள்-(உடலழியாது) ஒருமிக்க நிலைத்திருந்தவர்,
ஒருவரும் இல்லை யன்றே-ஒருவராயினும் இல்லையன்றோ. (எ-று.)
சக்ரவர்த்திகளாயினும்
இறத்தலின்றி வாழ்ந்தவரில்லையென்றனனென்க.
மன்னர்தம்
மன்னர் - சக்ரவர்த்திகள் அடிப்படுத்தல் - கீழ்ப்படுத்தல். திகிரி - சக்ரம்.
சக்ர ரத்தினம் எனபர் வடநூலார். சக்ர ரத்தினத்தையும் அதற்குரிய விபவங்களையும்
உடையார் சக்ரவர்த்திகள். விரிவு சீவகம்போதனை என்னம் நூலுட் காண்க.
பிறவிகளில்
மேன்மை பெற்ற தேவேந்திரன், சக்ரவர்த்திகள் இவர்களின் சுகமே நிறையற்றதென்றால்,
ஏனையோரின் வாழ்வை நிலையற்றதெனக் கூற வேண்டா வென்பது இவ்விரண்டு பாடல்களின்
கருத்தாகும்.
|
“மலைமிசை மதியி னீழல் பருதிபோல்
மத்தயானைத் |
|
தலைமிசைக் குடையி னீழல் தரணியை
முழுதுமாண்டோர் |
|
நிலமிசை யின்று காறு நின்றவ ரில்லை," |
என்றும்,
|
‘பிறந்தனர் பிறந்து சாலப் பெருகினர்
பெருகிப் பின்னை |
|
யிறந்தன ரென்ப தல்லால் யாவரு
மின்று காறு |
|
மறைந்துயிர் வாழா நின்றா ரில்லை‘
(சூளா) |
என்றும் கூறியதனை ஈண்டு ஒப்பிடுக. செல்வரேனும். உம்மை உயர்வு
சிறப்பு, மக்களின்-இன் அல்வழிவந்த சாரியை, ஒருவரேனும், உம்மை முற்றும்மை.
(39)
44. |
ஆடைமுன்
1னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன் |
|
மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை
புதிதின் வாழ்தல்2 [றோ |
|
நாடினெவ் வகையு மஃதே நமதிறப்
பொடுபி றப்பும் |
|
பாடுவ தினியென் நங்கை பரிவொழிந்
திடுக வென்றான். |
1
பாடம், னடிய, னிடிய
2
பாடம்
, வாழ்க. |
|