- 65 -

(இ-ள்.) நங்கை-நங்காய், எவ்வகை நாடின் உம்-எவ்வகையால் ஆராய்ந்தபோதிலும், நமது இறப்பொடு பிறப்பும்-நம்முடைய இறப்பும் பிறப்பும், முன் உடீ இயது ஆடைஇட்டு - முன்னே உடுத்தியிருந்த பழைய ஆடையை அப்பாற்போகட்டு (நீக்கிவிட்டு), ஓர் அம்துகில் அசைத்தல் ஒன்றோ - ஓர்  அழகிய புத்தாடை அணிவதும் முன்னது மாடம் விடுத்து - பழைய வீட்டை விட்டு, ஓர் வளமனை புதிதின் வாழ்தல் ஒன்றோ - ஒப்பற்ற வளந் தங்கிய   புதிய வீட்டில் குடி புகுந்து வாழ்வதும் (என்ற), அஃதே - அந்தத்தன்மை போன்றதேயாம், இனி பாடுவது என்-இனி (இதைத்தவிரச்)   சொல்ல  வேண்டியதென்ன விருக்கின்றது, (ஆதலின்), பரிவு ஒழிந்திடுக - இவ்வுடம்பின்

மீதுள்ள பற்று அறவே ஒழிவாயாக, என்றான்-என்று(அபயருசி) கூறி முடித்தான்.  (எ-று.)

நம்முடைய இறப்பும் பிறப்பும், பழைய ஆடை, வீடுஇவற்றை விட்டுப் புதிய ஆடை அணிவதும், புதியமனை புகுவதும் போல ஆகும்.  ஆதலின், இவ்வுடம்பின் பற்றொழிக வென்றா னென்க.

பழைய உடலினின்றும் மரணமெய்திப் புதியவுடலை எடுப்பது, பழைய ஆடையை விட்டுப் புத்தாடையை அணிவது போலும் என்பான், ‘ஆடைமுன்... அசைத்தல்‘ என்றான்.  எடுத்துக் கழிவதாகிய  கதியினின்றும் நீங்கி நூதன கதியை அடைவது, பழைய மனையை விட்டுப் புதிய மனையிற் புகுதற்போலும் என்பான், ‘மாடமுன்...  வாழ்தல்‘  என்றான்.  வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் போதும், மீண்டும்  வரும்போதும் உடையுடனே இருத்தலால், உடை - உடலிற்கும், மனை பிறவிக்கும் உவமையாயின.  ‘அந்துகில்‘ எனவே புதிய ஆடை ஆயிற்று.  அசைத்தல் - கட்டுதல்.  ஒன்றோ-இரக்கத்தில் வந்த இடைச்சொல்.  மாடம் - வீடு.  பாடுதல் - சொல்லுதல் பரிவு - அன்பு ; பற்று.  இனித்துன்ப மெனினுமாம்.  பிறப்பு அறுக்கும் எண்ணம் நமக்கு