திற்கு வருவதாகும். இதனையே, ‘அருவினை
விளையுளாய அருந்துயர்ப் பிறவிதோறும்‘ என்றார். பிறவிதோறும் - ஒவ்வொரு பிறவியிலும்.
மாமுனிவர்க் கன்றி மற்றை யோருக்கு அவ்வினைகள் பயனை அளித்தே ஏகுவதனால்’வீடு இல
விளைந்த வாறும்‘ என்றாள். விளைதல் - உண்டாதல். வீடு இல - விடுதல் இல்லாதனவாய்.
திருவுடைஅடிகள், சதத்தாசார்யர். திரு - ஈண்டு ஞானச் செல்வம்; அவதி ஞானம் அடைந்தவராதலின்,
(யசோ. 274)
அவரை இவ்வாறு கூறினார். அடிகள் - முனிவர். ‘திருவுடையடிகள்‘
என்பதற்கு இறைவன் எனினுமாம். ஜீவகாருண்யத்தை மூலமாகக் கொண்ட அறமாதலின்‘திருவறம்‘ என்றார்.
பயன் - வீடுபேறு. வெருவுதல்
- அஞ்சுதல். அடி, 2-ல் வெருவுதல், துன்பத்திற்கு அஞ்சுதல். அடி, 4-ல் வெருவுதல்,
துறவெண்ணத்தால் வினைகளுக்கு அஞ்சுதல். ‘வினைவசமாய விந்த வீறிலா வாழ்க்கை தன்னை,
நினைதொறும் உள்ளம் நின்று நடுங்கிடும்‘ (மேரு - 800) என்பது காண்க.
‘அதுநமதன்றென் றன்றோ
மனத்தினில் விடுத்தது ? என்று (யசோ 32ல்.) அபயருசி கூறியதற் கேற்ப, வெருவி நாம்
விடுத்த வாழ்க்கை‘ என்று அபயமதி கூறியதுஅவள் உள்ளத்தின் மாட்சியினை வெளிப்படுத்துகின்றது.
நம்
பிறவிக்குக் காரணம் ஞானவரணீயம் முதலிய எட்டுவினைகளே; அவற்றுள் நாம, கோத்திர
கர்மங்களினால் உடல் அடைவதும், வேதனீயகர்மத்தால் பயன் அடைவதும், ஆயுஷ்யகர்மத்தின்
முடிவினால் மரண மெய்துவதும் அமைகின்றன; இத்தன்மையை,
“வினையெனுங் குயவன் நம்மை வேண்டுரு வியற்றல் கண் |
[டாய |
அனகனா முருவந்தன்னைப் பெண்ணுரு வாக்கி
யங்கே |
மனைவியை மகளு மாக்கி மகளையே மைந்த
னாக்கி |
நினைவினான் முடித்து நின்றார் நீதியார்
கடக்க வல்லார்” |
என்று (மேரு. 462-ல்) கூறியதனா
லறிக. (42)
|