இதுவுமது
47. |
பெண்ணுயி ரெளிய தாமே பெருந்திற
லறிவும் பேராத் |
|
திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி |
|
அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல்
லறத்திற்காட்சி |
|
கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு
முடைய ரோதான். |
(இ-ள்.)
‘பெண் உயி்ர் - பெண்களாகப் பிறந்தவர்கள், எளியது ஆம்-மென்மையுடையவர்; (அன்றியும்),
சிந்தையில் பெருந்திறல் அறிவும் போரத்திண்மையும் உடையவல்ல-மனத்தில் மிக்கவன்மையான
அறிவும் கலங்காத திண்மையும் உடையவர் அல்லர்‘, என்பது எண்ணி-என்பதைக்கருதி, அண்ணல்
நீ-சிறந்தவராகிய தாம், அருளிச் செய்தாய் - அருளிச் செய்தீர், அன்றி - அல்லாமல்,
நல்அறத்திற் காட்சி கண்ணிய மனத்தர் - திருவறத்திற் கூறியநற்காட்சியை மேன்மையெனக்
கருதி ஒழுகுபவர், இம்மைக் காதலும் உடையரோ-இப்பிறவியி்ல் காதல் உடைவர் ஆகுவரோ?
(ஆகார்). (எ-று.)
பெண்ணுயிரின் தன்மையைக்
கருதி இவ்வாறு கூறினீர்; நற்காட்சி யுடையார் பற்று அடையார் ஆதலின், காட்சியுடைய
எனக்கும் யாதொரு பற்றும் இல்லைஎன்றாளென்க.
திண்மை-உறுதி.
உயிருக்கு மென்மையும் வன்மையும் இல்லையாயினும் எடுத்த உடலுக்கு உள்ள குணங்களை உயிருக்கு
ஏற்றிக் கூறினாள். உயிர் என்றதனால் எளியது என்றார். பெண்கள் மென்மையுடையராதலின்
அவர்களை மெல்லியலார் என்று கூறுப. இனி எளியது என்பதற்குப் பிறப்பால் தாழ்வுடையர்
எனினுமாம்; என்னை யெனின், கருத்தங்கிய காலம் முதலியவற்றில் துன்புறும் உடலாதலாலும்,
முற்பிறவியில் நற்காட்சியுடையார் பெண்களாகப் பிறவா ராதலாலுமென்க. *செறியச் சொன்ன
பொருள் தெளிந்தார் சேரார்
|