உயிரினுருவமுள்ளி அறப்பெருமை நாடி ஐம்பொறிவாயிலை வென்றவர்களைப்
புகலாகவடைந்து நம் உடல்விட்டு நீங்குவாம் என்று அண்ணல் கூற, அபயமதியும்நேர்ந்தன
ளென்க.
உருவம் என்றது ஈண்டு உடலளவாகப் பரவியுள்ளஉயிரின் சொரூபத்தினை;
‘குடங்கையில் விளக்கெனக்கொண்ட கொண்டதன் னுடம்பின தளவுமாம’ (மேரு.81.) என்று கூறுதல் காண்க. ஒன்றிய என்பது, பாலும்
நீரும்போல ஒன்றாகத் தோன்றும் உயிர் உடலின் ஒற்றுமையினை.
|
‘ஒற்றுமை நயத்தில் ஒன்றெனத்
தோன்றினும் |
|
வேற்றுமை நயத்தில் வேறே யுடலுயிர்‘ |
என்று (நன், எழு,சூ.451) கூறியிருப்பது காண்க.
உயிர் உடல் இரண்டும் உருவத்தால் மட்டுமின்றி, குணத்தாலும்
வேறு என்று பிரித்துக்கூறி உயிரின் தன்மையை நாம் அறியவேண்டும் என்பான், ‘வேறாம்
உயிரினது உருவம் உள்ளி நன்றென நயந்து‘ என்றான். வென்றவர் - பஞ்சபரமேஷ்டிகள்.
சரணம் மூழ்கி என்றது-பக்தி பரவசனாகிப் பாதத்தில் படிந்து என்றபடி. ‘அருகன சரணமூழ்கி’ என்றார் வாமன முனிவரும். உயிரின் உருவத்தை மனத்தாலறியலாமேயன்றி
ஐம்பொறிகளாலறிய வியலாதாதலின் ‘உள்ளி‘என்றார். உள்ளுதல் - நினைத்தல்.
இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.
50. |
‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா
மியல்பிற் றாகி |
|
அறிதலுக் கரிய தாகி யருவமா யமல
மாகிக் (வேறா |
|
குறுகிய தடற்றுள் வாள்போற்
கொண்டிய லுடம்பின் |
|
யிறுகிய வினையு மல்ல தெமதியல்
பென்று நின்றார்.‘ |
(இ-ள்.)
எமது இயல்பு-எம்முடைய ஆத்ம சொரூபமானது. அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு - அறிவையும்
காட்சியையும் தன்னிடத்துக்கொண்டு, அனந்தம்ஆம்
|