- 76 -

இயல்பிற்று ஆகி-அளவில்லாத குணங்கள்  இயற்கையாலுடையதாகி,  அறிதலுக்கு  அரியதாகி-(ஆகமத்தாலும் அனுமானத்தாலும்*  அறிதலேயன்றி,  கேவலியைப்போல நேரில்)  அறிவதற்கு அருமையானதாகி, அருவம்  ஆய்- (அணுக்கூட்டங்களின்  உருவம் அன்று ஆதலால்)  உருவம் இல்லாததாகி, அமலம் ஆகி-(வினைகளினின்றும் வேறாந்தன்மையுடையதாதலின்) மலமற்றதாகி,  குறுகிய  தடற்றுள் வாள்போல்-குறுகிய உறையினுட் பொருந்தியுள்ளவாளாயுதம் போல, கொண்டு இயல்  உடம்பின் வேறாய்-உயிரை உட்கொண்டு  செல்லும் உடலினின்றும் வேறாகி, இறுகிய வினையும் அல்லது-இறுகிப்பிணித்த எண்வினைகளின் தன்மையும் அல்லாதது,  என்று  நின்றார்-என்று (உயிரின் இயற்கைப்பண்புகளை) எண்ணியிருந்தனர்.(எ-று.)

உயிர் (செயற்கையினால் வடிவம் முதலியன காணப்பட்டு வினைகளினால் மயங்கிய ஞானமுள்ளதாகக் தோன்றினும்) இயற்கையினால் கடையிலா அறிவு,  கடையிலாக்காட்சிலிய எண்குணங்களுடையதும்,  ஐம்பொறிகளால் அறியவியலாததும்,  வடிவு மில்லாததும், மலமற்றதும், உறைக்குளிருக்கும்

வாள்போல உடலினின்றும் வேறானதும், வினைகளின் தன்மையல்லாததும் ஆகும் என்று (தம் உயிரின் இயற்கையை)  ஆலோசித்தனரென்க.

ஆலோகம்-காட்சி; மேரு.613 காண்க.  இதனை வடநூலார் தரிசனம் என்பர்.  காட்சி என்பது பொதுவாகக்காணுதல். ஞானம் என்பது ஒவ்வொன்றையும் தனித்தனியாக அறிவது.  உயிரின்  இயற்கைக் குணங்களாகியகடையிலா அறிவு,  காட்சி,  இன்பம், வீரியம் முதலாகிய எண்குணங்களைக் குறிப்பிடவேண்டி ‘அறிவொடா

 

* அனுமானித்தல் - காரியத்தைக்கொண்டு  காரணத்தை

  ஊகித்தறிதல் நெருப்பின் காரியமான புகையைக் கொண்டே

  நெருப்பு உண்டு என ஊகித்தறிதல்.  தூமாக்னிநியாயம் என்பர்

  வடநூலார்.