- 77 -

லோகம்* உள்ளிட்டு அனந்தமாம் இயல்பு‘ என்றார்.  எண்குணங்களை  யசோ.52 இன் உரையில்  காண்க

புத்கலத்தாலாய  உடலோடு வினைகளின் சேர்க்கைபொருந்திய  உயிருக்கு,  அவ்வுடலுக்குரிய  வடிவம் முதலியவற்றை  உபசாரத்தால்  கூறலாமே யொழிய,  இயற்கையில்  வடிவம் முதலியன இல்லை  ஆதலின்,  ‘அறிதலுக்கு அரியதாகி  அருவமாய’  என்றார்.  வினைகளாகின்ற  அழுக்கு, மலம் எனப்பட்டது.  உயிர்  இயல்பாக மலமற்றதாகலின் ‘அமலமாகி’  என்றார்.  தடறு - ஆயுதவுறை  வாளுக்கு  அளவாயுள்ளதைக் ‘குறுகியதடறு’  என்றார். ‘சேதனமாலாவி யசேதனமாவிவ்வுடம்பு, ஆதலின்  வேறாயவவ்விரண்டுஞ் சேர்தலினால்,  மன்னு மொன்றாய்விடினும் வாளுந் தடறும் போல’ என்று (திருக்கலம்.72.)  கூறியது இங்குக்காணத்தக்கது.  இயலுதல்-செல்லுதல்.  உயிர், உடம்பினுள்  கலந்திருந்தாலும் அதன் இயற்கைக்குணம் வேறாதலின், ‘உடம்பின் வேறாய்‘ என்றார்.  உடம்பின்  வேறாதல் போலவே  வினைகளினின்றும் வெறேன்பார் ‘இறுகிய வினையுமல்லது‘ என்றார்.  கட்டியவினை தவறாது பயனளிப்பதனால் ‘இறுகிய வினை’  என்றார்.  ‘இறுகிய வினைகளுக்கிறைவனாய’  என்றார்.  (மேரு. 82)  வாமன முனிவரும். (46)

இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்

51.  உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப்
  பிறவிசெற்  றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்
  அறிவினிற் றெளிந்த1 மாட்சி யரதனத் திரய மென்னும்
  பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார்.

 

*உயிருக்கு அறிவும் காட்சியும் இயற்கைப் பண்புகள்

மேகத்தால் சூரியன்ஒளி மறைவதுபோல வினைகளால் உயிரின்

பண்புகள் மறைகின்றன.

1 பாடம் தெரிந்த.