- 80 -

வணங்கும் நமக்கு எண்ணம் தூயதாமாதலால்,  அதற்குத் தகுந்தவாறு பயன் கிடைக்கின்றன.  அவ்விறைவன் அருளிய அறவுரையே நாம் நன்மை  தீமைகளைப் பகுத்துணர்ந்து நல்வழியில் நடப்பதற்கும்,  அதனால்  நல்வினைகளை அடைந்து(கடைசியில்)  கைவல்ய பதம்  அடைவதற்கும்  காரணமாதலின்,  ‘ஈங்கு நம் மிடர்கள்  தீர்க்கும்  இயல்பினார் நினைதுமேல்‘  என்றார். கல்,  சேறு முதலியவற்றின் பளுவினால்  கிணற்றடியி லழுந்திக்கிடந்த ஒரு  தக்கை அப்பளுவு நீங்கியவுடன் தண்ணீர்மட்டத்தின்  மேல்,  செல்வது போல,  காதி அகாதி  என்ற வினைகளின்* தொடர்புடன்  உள்ள உயிர்  அவ்வினைத்தொடர்பு  அறவேநீங்கினமேல்  நோக்கிச் செல்லும் இயல்புடைய தாகலின்  உலகின் உச்சியை அடைந்து,  அதற்கு மேல்  செல்வதற்குக் காரணமாகிய  தர்மத்திரவியம்1 இல்லாததனால் அவ்விடத்தேதங்கி நிற்கிறது. அவ்விடமே வீடு,  சித்தக்ஷேத்ரம்,  முக்திஸ்தானம் எனப் பலபெயரால் கூறப்படும்,  அவ்விடத்துச்சார்ந்தாரை, ‘இவ்வோங்கிய வுலகத் தும்பர் ஒளி  சிகாமணியின்  நின்றார்‘  என்றார்.  இதனை, ‘கேவலப் பேரோளியால்...  உயர்ந்து உலகின் முடிக்கு ஒர்  சூளாமணியானான்‘  என்று  தோலாமொழித்தேவரும்,  ‘மூவுலகுச்சியின்பக் கடலினுள் மூழ்கினானே‘   என்று  திருத்தக்கதேவரும்,  ‘வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்‘  என்றுதேவரும் கூறியுள்ளனர்.

  “மன்னிய வறிவு  காட்சி மறைத்தல்வே  தனீயத்  தோடு
  துன்னுமோ கனீய மாயுத்  தொடர்நாம  கோத்தி ரங்கள்
  முன்னுறு மந்தராய மொழிந்த  வெண் குற்ற மாகும்
  இன்னவை தீர்ந்தோன் யாவன் யாவர்க்கு மிறைவ னாமே” 

    என்று சூடாமணி  நிகண்டு (12-87-ல்) கூறுவதும் சித்தபரமேஷ்டியையே.

 


* இருள் சேர் இருவினை‘ என்று (குறள்)  தேவர் கூறியதும் அதனையே என்ப.

1 யசோ.