- 82 -

ஈண்டுக், கூறிய காதிவினையின் விரிவு  நாற்பத்தேழாயிருப்பினும் அகாதி  வினையின் பிரிவான நாம கருமத்தில் பதின்மூன்றும்,  ஆயுஷ்யத்தில் மூன்றும் சேர்த்து  காதிவினையின் விரிவகை  அறுபத்து மூன்று என்றும்,  நாம கருமத்தில் (எஞ்சி நின்றது) எண்பது,  ஆயுஷ்யம் ஒன்று, வேதனீயம் இரண்டு,  கோத்திரம் இரண்டு ஆக அகாதி வினையின் விரிவு  என்பத்தைந்து  என்றும் கூறப்படுவதுண்டு  இதனை,

  ‘ஆயிடை யெண்பத் தைந்து வினை விட்ட வக்கணத்தே
  போயுலகுச்சி  புக்கான்  பொருந்தி யெண்குணங்களோடும்‘

என்று(மேரு.811-ல்)கூறுவதனா  லறியலாகும்.

ஞானாவரணீயம் கெடுதலால்  கடையிலா ஞானமும், தரிசனாவரணீயம்  கெடுதலால்  கடையிலாக் காட்சியும், மோஹநீம் கெடுதலால்  கடையிலா இன்பமும்,  அந்தராயம் கெடுதலால்  கடையிலா வீரியமும்,  வேதனீயம் கெடுதலால் (அவ்யா பாதத்வம் அல்லது)*  அழியா வியல்பும், ஆயுஷ்யம்

கெடுதலால்  ஆயு  வின்மையும் , நாமம் கெடுதலால்  நாமமின்மையும்,  கோத்திரம் கெடுதலால் கோத்திரமின்மையும்  என்ற எண்குணங்களும் விளங்குகின்றன.  இவ்வெண் குணங்களையும்,

  ‘கடையிலா ஞானத் தோடு காட்சிவீ ரியமே யின்ப
  மிடையுறு நாம மின்மை வித்திதகோத் திரங்க ளின்மை
  அடைவிலா  வாயு  வின்மை யந்தரா யங்க ளின்மை
  உடையவன் யாவன் மற்றிவ்  வுலகினுநக் கிறைவ னாமே.1

*

அழியாவியல்பு முதலிய நான்கையும் வடநூலார் அவ்யாபாதத்வம், அதிருசூமத்வம், அகுரு  லகுத்வம். அவ ககனத்வம் எனபர்.

1

எனக்கு கிடைத்த ஏட்டுப் பிரதியிலும் பழைய  அச்சுபிரதியிலும், ‘உடையவன் யாவன்  மற்றிவ் வுலகிலும்  கிறைவனாமே‘  என்றே இருக்கின்றது.  ஆறுமுக நாவலரின் அச்சுப்பதிப்பில்,  ‘உடையவ னிறைவ னென்ன வுரைக்கு  மாருகத