(இ-ள்.)
பேது உறு பிறவி போக்கும் - (வினைகளால்) மயங்கி உழலும் பிறவியை அழிக்கும், பெருந்திரு உருவுக்கு ஏற்ற-சிறந்த திருவடிவத்திற்கு
ஏற்புடையனவாகிய, கோது அறு குணங்கள் பெய்த கொள்கலம் - குற்றமற்ற குணங்கள் பெய்யப் பெற்று நிரம்பிய நன்கலத்தை,
அனையராகி - ஒப்பவராகி,சேதியின் நெறியின் வேறு - மோக்ஷமார்க்கத்தினைத்தவிர
(மோக்ஷத்தினை) எய்துதற்குக் காரணமான சுத்தோபயோகத்தைத் தவிர)வேறே, சிறந்தது சிந்தை செய்யா-சிறந்ததாகிய சுபோபயோகத்தையும் சிந்திக்காத,
சாதுவர் அன்றி-சர்வசாதுபரமேஷ்டிகளேயல்லது, உலகில் - இவ்வுலகில், நமக்குசரண் ஆவார் யார் --, (எவரும் இல்லை).
(எ-று.)
பிறவியை நீக்கும் உருவமும், அவ்வுருவுக் கேற்ற குணங்களும்,
குணங்களுக் கேற்ற செயலும் உடைய சர்வ சாதுக்களே நமக்கு சரண் என்று துதித்தன ரென்க.
பிறவிபோக்குங் குணங்கள், திருஉருவுக் கேற்ற குணங்கள்
என்க. பேது--அறிவை மயக்குவது. பெருந்திரு உருவம் - முக்தி எய்துதற்குக் காரணமான உருவம்; திகம்பரஉருவம். கோது -
குற்றம்; ஆசை, கோபம், மயக்கம் என்ற முக்குற்றங்கள். குணங்கள் - நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற
மூன்று குணங்கள். கொள்கலம் - பாத்திரம். இங்கு, குணங்கள் நிரம்பிய பாத்திரம்.
சேதியின் நெறி - முக்தி நெறி. சேதி
- மோக்ஷம். சேதி - மோக்ஷம் என்பதனை,
" |
ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை |
|
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை |
|
போதியங்
கிழவனை பூமிசை யொதுங்கிய |
|
சேதியஞ்
செல்வரின் றிருந்தடி வணங்கினம்” |
(சூளா. இரத. 96.)
|