- 109 -

இப் பெண்மணியின் வீரத்தனமே,  பேசுதற்கு  அரியது-சொல்லுதற்கு அருமையானது,  என்றார் - என்று  வியந்துகூறினர். (எ-று.)

காளையின்  சொல்லைக் கேட்டமக்கள். இவர்  ஆண்மையினும் இப்பெண்மணியின் ஆண்மையே சொல்லமுடியாததாயுளது  என்றரென்க.

மேனி-உடலின் ஒளி;  தேஜுஸம் காளை - இளம் பிராயமுள்ளவன்.  பண் - இசை,  படி-பூமி முடிய-முழுவதும்.  ஆண்மை - மரணத்திற்கு  அஞ்சாமையும்  உயிர்க்கொலை செய்யவிருந்த மன்னனுக்கு அஞ்சாது  அறமொழி புகன்றதும்.  ஏனும்-எனினும் என்பதன் மரூஉ.  பெண்ணினுக்கு  அரசி-பெண்தன்மையினுக்கு  அரசிபோல்வாள். ‘பெண்ணுயிர்...திண்மையுடைவனவல்ல‘  என்று (யசோ. 47-.ல்)  பெண்களின் இயல்பைக் கூறினாராதலின், பெண்களுக்கு ஆண்மை தோன்றுத லருமை பற்றி  ஈண்டு, ‘பெண்ணினுக்கு  அரசியாண்மை  பேசுதற் கரிது‘  என வியந்தோதினார்.

ஆண்மை  என்பது இருபாலருக்கும் வழங்கும். இதனை, ‘பிறப்பே குடிமைட ஆண்மை‘  என்ற (தொல். மெய்ப்-25.) சூத்திரத்தா லறியலாகும்,  இனி, ‘ஆண்மையாவது ஆளுந்தன்மை.  அஃது,

“ஆயிடை இருபே ராண்மை செய்த பூசல்”

(குறுந். 43.)  என இருபாலையும் உணர்த்திற்று‘  என்னும் நச்சினார்க்கினியருரை ஈண்டு நோக்கத்தகும். (59)

மன்னனும் வியத்தல்

64.  மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி
என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்
என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு  கென்றான்.