செயவிரும்பினார்கட்கு அல்லாமல், மருளுடை மறவருக்கு - மயக்க முடைய (தீயதொழில் புரியும்)
பாபிகளுக்கு, எம் வாய் மொழி - எமது மெய்ம்மொழிகள், மனத்திற்சென்று (அன்னவர்) மனத்துட் புகுந்து, பொருள் இயல்பு
ஆகி நில்லா - பொருளினுண்மை உள்ளவாறு பதிந்து நிலை பெறா (ஆதலின்), புரவல - அரசே, கருதிற்று உண்டு ஏல்-
(எம்மைப் பலியிட) நினைத்தது உண்டாயின், அருள் இயல் செய்து செல்க -(தங்களுடைய) கருணையின்படியே செய்து செல்வீராக,
ஆகுவது ஆக-ஆக வேண்டிய நியதியின்படி ஆகட்டும், என்றான் - என்று (அபயருசி) கூறினான். (எ-று.)
கருணையிலாதார்க்கு யாம் கூறும் அறமொழி
பலன் தாராதாதலின், தாங்கள் கருதியவாறு செய்க என அபயருசி கூறினான்.
அருளுடையார்க்கன்றி மருளுடையார்க்கு
எத்துணை நலனுறக் கூறினும் அவர் அறம் மேற்கொள்ளார் ஆதலின், ‘அருளுடை மனத்தராகி... நில்லா‘ என்றார்.
இதனை,
என்பதனால் அறிக. அன்னார் மனத்தில்
பொருளின் உண்மை உள்ள வாறும் தோன்றாது, தோன்றினும் நிலை பெறாது உடனே அழியும்.
அபயருசி, தம் பழம்பிறவிகளின் வரலாற்றையும்
அவற்றுள் தாமெய்திய இன்னல்களையும் தொகுத்துச் சுருக்கிக் கூறிய வுடனே, மன்னன், சிறிதே அன்பு பூண்டான் என்பதனை அறிந்தானாயினும்,
மன்னன், ஆண்டுள்ள பிராணிகளைப் பலியிட வேண்டா வென்று உத்திரவு கொடாதத னாலும் கையிலுள்ள வாளை விடாதத னாலும் மேலும்
அவனுக்கு உறுதியான அருளில் மனம் பொருந்த வேண்டி,