அபயருசியின்
அறவுரை
67. |
மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப் |
|
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல் |
|
அன்னமென்
னடையி னாளு1 மருகணைந் துருகும் வண்ண |
|
மன்னவ
குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான் |
(இ-ள்.)மேகம் - மேகமானது, மின்னொடு தொடர்ந்து-ஓர் மின்னலுடன் தொடர்ந்து சென்று, மேதினிக்கு ஏதம் நீங்க-உலகத்
துயிர்களுக்குத் துன்பம் விலகுமாறு, பொன்வரை முன்னர் நின்று - பொன்மலையின் முன் நின்று, புயல் பொழிந்திடுவதே போல்-நீரைப்
பெய்வது போல, அன்னமெல் நடையினாளும் - அன்னம் போல மெல்லிய நடையினையுடைய அபய மதியும், அருகு அணைந்து-தன் பக்கத்தே சார்ந்து
நிற்ப, மன்னவ குமரன் - அரசகுமரனாகிய அபயருசி, உருகும் வண்ணம் - அங்கு குழுமி யிருப்போர் உள்ளம் உருகும்படி, மன்னற்கு-மாரிதத்த வரசனுக்கு,
அறமழை பொழியல் உற்றான்-அறவுரை யாகிற சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கினான். (எ-று.) மின்னல் விரவிய மேக மானது, மேதினியிலுள்ளோரின்
வருதத்தை நீக்கப் பொன் மலையினிடம் (சென்று) மழை பொழிவது போல; அபயருசி, அபயமதி பக்கத்திலிருக்க மாரிதத்தனுக்கு
அற முரைத்தற்கு ஆரம்பித்தனனென்க.
மேதினி-பூமி; ஆகுபெயர். மழையினால்
மேதினியிலுள்ள பயிர் முதலிய சகல வுயிர்களும் இன்ப மெய்துவது போல; இவ்வற மழையினால்
தருமப் பயிரானதுவளர்ந்து விலங்கினமும் உய்வு பெற்று மானிடரும் தீயசெயலி னின்றும் விலகி (கோபம் முதலிய) தாபம் தணிவதற்குக் காரண மாதலின், அற வுரைக்கு மழை
உவமையாயிற்று. அபயருசியை மேகமாகவும், அபயமதியை
|