- 121 -

உடைய சுதத்தா சாரியர், அருளிற்று அன்று-(எம் தந்தைக்கு) அருளிச் செய்த அந்நாளில், இப்பிறப்பு உணர்ந்ததனின்-(அவர் உரையினால்) எங்களுடைய இப்பிறப்புக்களை உணர்ந்ததற்கு மேல், பெயர்த்து-திரும்பவும், யாமே உணர்ந்திடவும்  பட்டது-எமக்கு உண்டான பழம்பிறப்புணர்வினால் (எம்மாலும்) அறியவும் பட்டுளது,  (ஆதலின்), இதன் கண்-இவ்வற வுரையின்கண், இறப்பவும்-மிகவும், இனிது-இனிதாக, தேற்றம் வைத்திடு மின்-தெளிவு வைத்துக்கேளுங்கள், என்றான்-என்று அபயருசி கூறினான்; எவரும்-ஆங்கிருந்த யாவரும், உறப்பணிந்து-(தலை முதலிய அவயவம்) நிலனுறப் பணிந்து (வணங்கி), உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார்- மனத்தில் விரும்பிக் கேட்கலாயினர்.  (எ-று.)

பழம் பிறப்புணர்வால்  அறிந்த தம் வரலாற்றைக் கூறுவேன் என அபயருசி கூற,  அதனை நம்பிய மக்கள் விரும்பிகேட்கலாயின ரென்க.

தம் பழம் பிறப்பின் வரலாற்றினை தம் தந்தைக்கு சுதத்தா சார்யரால்  மொழிந்த  அன்றே தமக்கு  ஏற்பட்ட பழம் பிறப்புணர்வாலும் அறிந்துளோம் என்பான், ‘காட்சியருந்தவர்  அருளிற்று அன்று‘ எனவும், ‘இப்பிறப் புணர்ந்தனின் யாமே பெயர்த்துணர்ந்திடவும் பட்டது‘ எனவும் கூறினான்.  தந்தைக்கு  அருளிச் செய்ததை,

‘இது நுமர்கள் பல வினைகள் விளையுமியல்பிது வென்றெதுவின் முனியருளு மொழி யவையவைகணினையா.....  மன்னவன் மருண்டான்,‘ எனக்கூறும்   (யசோ. 293-ம்) செய்யுளாலும்; அன்றே இளைஞர் பழம் பிறப்புணர்ந்ததனை,

  ‘ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந்
  தாங்கலர்கள் சென்று தவ வரச னருளாலே
  நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்‘
  நிரந்தரநான் வந்திப்ப னின்று.’ என்றும் (சீவசம்.4.)
எனவும்,  
   
  'மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனு மங்கையாயய
  பேதையும் பிணையனாளும் பிறப்பினி துணர்ந்த  பின்னர'