நாளில்
என்பது அடுத்த கவியின், ‘தனயற் றந்தனள்‘ என்பதனோடு முடியும், கந்து - யானைகட்டுந்தறி,
மதம்-மதநீர், அது அவ்யானையின்; காதுகளிலும், நெற்றியிலும், கோசத்திலு மிருந்து
சுரப்பதால் மூவகையதாம். இதனை வடநூலார், கர்ணமதம் கபோலமதம் கோசமதம் என்பர்.
யானையின் வளப்பம் கூறவே, ஏனைய மூவகைபடைகளும் பெறப்படும். உஞ்சயினி நகரம் (யசோ.
73-ல்) அமராவதியிலும் மிக்கதெனக் கூறி ஈண்டு அதற்குத்தலைவனாகிய அசோகனை இந்திரனோடு
உவமித்தன ராகலின் தலைவிக்கு இந்திராணி உவமையாகக் கொண்டோம். அமர்தல் - மேவல்.
தொல்காப்பியம். (2)
இக்காப்பியத் தலைவனான யசோதரன்
பிறப்பு
75. |
இந்துவோ ரிளம்பிறை
பயந்த தென்னவே |
|
சந்திர மதியொரு
தனயற் றந்தனள் |
|
எந்துயர்
களைபவ னெசோத ரன்னென |
|
நந்திய புகழவ னாம மோதினான். |
(இ-ள்.)
இந்து - முழுமதியானது. ஓர் இளம்பிறை-ஒரு இளம்பிறையை, பயந்தது என்ன-பெற்றது போல,
சந்திரமதி-சந்திரமதி யென்பாள், ஒரு தனயன் தந்தனள்- ஒப்பற்ற புத்திரனைப்
பெற்றனள் (அதுகண்டு), நந்தியபுகழவன்-நிறைந்த புகழுடையவனான அசோக மன்னன், எம் துயர்
ளைபவன் -நம் துயர்நீக்க வல்லவன் (இவனே என்று மகிழ்ந்து), எசோதரன் என நாமம்
ஓதினான்-யசோதரன் என்று (அம்மகனுக்குப்) பெயர் வழங்கினான்.
அசோகன்,
சந்திர மதியினிடம் பிறந்த மகவுக்கு யசோதரனென பெய ரிட்டன னன்க.
இந்து இளம் பிறையைப்
பயந்தது இல்பொருளுவமை. சந்திரமதிக்கு முழுமதி யுவமை. எத்தகைய சிறப்புற்ற தேனும்,
‘மக்களை யிலாத தோர்மனை‘ பயனின்மையின், ‘எம்துயர் களைபவன்‘ என்றான். துயர்- |