யசோதரனெனுந்தனையனை
நிலமகட்டலைவனாகென, களைமணி வனை முடிகவித்து‘ என்று (யசோ. 82-ல்) கூறுவதனால்,
ஈங்கு ‘மன்னன்‘ என்பதற்கு இளவரசனெனப் பொருள் கொள்ளப்பட்டது. அமிர்தம் என்ற
சொல் முன்னாலுடையமதி, அமிர்தமதி. (யசோ. 25)
வேள்வி - திருமணம் முதலிய
காலங்களில் சமிதை,முளைக்குஞ்சக்தி யற்ற மூன்று வருஷத்து நெல்லினால் பொரித்த
பொரி, நெய் இவற்றைக் கொண்டு செய்யும் ஹோமம். முளைக்குஞ் சக்தியற்ற மூவாண்டு
நெல், வடமொழியில் அஜம் எனப்படும். அசம் என்பது மூன்று வருஷத்திய நெல்லைக் குறிக்கும்
என்பதனை, ‘அச மூவாண்டுறு நெல்லாடாம்‘ என்ற சூடாமணி (11;9.) நிகண்டினாலறியலாகும்.
(4)
யசோமதியின்
பிறப்பு
77. |
இளையவ ளெழினல
மேந்து கொங்கையின் |
|
விளைபய னெசோதரன்
விழைந்து செல்லுநாள |
|
கிளையவ ருவகையிற்
கெழும வீன்றனள் |
|
வளையவ ளெசோமதி
மைந்தன் றன்னையே. |
(இ-ள்.)
எசோதரன்-இளவரசனாகிய யசோதரன்,இளைவன்-இளம் பருவமுடைய அமிர்த மதியின், எழில்கலம்
- அழகின் நலத்தையும், ஏந்து கொங்கையின் விளைபயன்-பருத்துயர்ந்த தனங்களினாற்
பெறும் இன்பத்தையும், விழைந்து செல்லும் நாள் - விரும்பி இன்புறும் நாளில், கிளையவர்-சுற்றத்தார்,
உவகையில் கெழும-மகிழ்ச்சியில் நிறைந்திருப்ப, வளையவள்-வளையலை யணிந்த அமிர்த
மதி,எசோமதி மைந்தன் தன்னை-யசோமதி என்ற ஓர் ஆண்மகவை, ஈன்றனன்-பெற்றனள்.
யசோதரன் அமிர்த மதியிடம் இன்புற்றிருக்கும்நாளில்
யசோமதி யென்ற ஒர் புதல்வன் பிறந்தனனென்க.
|