- 137 -

மேல் சென்று அடர்த்து - அவர்கள் மேல் படை எடுத்துச் சென்று யுத்தம் செய்து,  வஞ்சனை பலவும் நாடி - அவர்கள் செய்யும் வஞ்சனைகள் பலவற்றையும் ஆராய்ந்து, வகுப்பன வகுத்து  - அதற்குரிய தந்திரங்களைத் தானும் செய்து,  புஞ்சிய பொருளும் - (அவர்களுடைய)  மிகுதியான பொருள்களையும், நாடும் - அவற்றிற்கு வருவாயாகிய நாடுகளையும், புணர்திறம் - அடையும் வழியையும், நெஞ்சில் புணர்ந்து - மனத்தே ஆராய்ந்து கொண்டு,  துஞ்சுதல் இலாத கண்ணன் - நாள்தோறும் கண்ணுறக்கம் இல்லானாய், துணிவன துணிந்து நின்றான்-செய்யத் தகுவனவற்றைச் செய்துப் பொருளைத் தேடும் வழியிலேயே நின்றான்.

மண், பொன் முதலிய ஆசைவெறி பிடித்த மன்னன் அதற்குரிய நினைவு செயல் முதலியவற்றால் கண்ணுறக்கமும் இலனாயினன் என்க.

தெவ்வர் - பகைவர்.  ‘வஞ்சனை பலவும் நாடி';  என்பதற்கு, ‘தான் செய்யும் பலவஞ்சனைகளையும் ஆராய்ந்து எனினுமாம், ‘தூங்காமல்  தூங்கி சுகம் பெறுவ தெக்காலம்'; என்னும் எக்காலக் கண்ணியைப் போலல்லாது இம் மன்னன் தீய வழியில் துஞ்சுதலிலனாயினனென்றற்கு, ‘துஞ்சுதலிலாத கண்ணன்‘ என்றார். இனி,  மன்னன் துயின்றாலும் அவன் மனம் துயிலவில்லை  எனினுமாம்.             (14)

87.

தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால்

  பாடலொ டியைந்த1 பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல்
  ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும
  நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.

(இ-ள்.) தோடு அலர் கோதைர மாதர்-இதழ் விரிந்த பூமாலை யணிந்த மாதர்களின், பாடலொடு இயைந்த - கண்டப்பாடலொடு பொருந்திய,  துயரியில் தொடுத்து எடுத்த-யாழ் நரம்பில் தொடுத்துவாசிக்கப்பெற்ற,பண்ணின் இசைச் சுவை - யாழிசையிங் சுவை.

 

1 பாடலொடியைந்து.