- 136 -

மருட்சியை, செல்வச் செருக் கென்றார்,  தான் ஈட்டிய பொருள்களுக்குத் தான் தலைவனாதலை விட்டு, அவற்றிற்குத் தான் அடிமை யாவதைக் குறித்து, ‘செல்வச் செருக்கினால் நெருக்கப்பட்டு‘ என்றார்.  மருத்து-காற்று; புயல்காற்றன்றி கடல் கலங்குவதற்கு காரண மன்மையின்,‘மருத்து‘ புயல் காற்று எனப்பட்டது.  மறுகுதல்-கலங்குதல். மருத்தெறி கடல்‘ என்ற உவமையால், உட்பகையை உபமேயாமாக் கொள்ளப்பட்டது.  அவை; காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்,என்பனவாம்.  கடல்,  காற்றுள்ளபோது  கலங்கினும் காற்றில்லாதவழி தன்னிலமை அடைதல்போல;  செருக்கு முதலியவற்றின் நீங்கின மனமும் நன்னிலை பெறமென்பது உட்கோள்.  உருத்தல்-மிகுதல், தோன்றுதலுமாம். மனத்துடன் சொல்லும் செயலும் ஒன்றியிருத்தலின், ‘உள்ளமெய் மொழியோ டொன்றி‘ என்றார். மனம் வாக்கு காயம் என்ற இம்முன்றையும் அந்தக் கரணம் என்பர் வடநூலார். அருத்தி - விருப்பம், பாதி எனினுமாம்.  அறம் பொருள் இன்பம் வீடு என்ற புருஷார்த்தம் நான்கனுள் பொருள்,  இன்பம் ஆகிய இரண்டையும்  விரும்பி அறத்தையும், வீடு பேற்றையும் அறவே  மறந்தொழிந்தமையின், ‘அருத்தி செய் தருத்த காமத் தறத்திற மறத்துறந்தான்‘ என்றார்.  ‘அறம் பொருளின்ப மூன்றில் ஆதியால் மூன்று மாகும்‘  என்ற மூதுரையின்படி,  பொருளின்பங்களின் வருவாய்க்கு  அறமே காரணமாயிருந்தும் அதனை மறந்தது செல்வச் செருக்கிலீடு பட்டதாலென்க.          (13)

86. அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே  லடர்த்துச் சென்று
  வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன் 
  புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து  நெஞ்சில்
  தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து  நின்றான்

(இ-ள்.) மன்னன் - வேந்தனாகிய யசோதரன், அஞ்சுதல்ª இலாத தெவ்வர் அவிய - தனக்கு அஞ்சிப்பணிந் தொழுகாத பகை வேந்தர்களின் வலிகெடுமாறு