- 139 -

(இ-ள்.) மற்று ஓர் நாள் - வேறு  ஒரு நாள், மன்னர் தம்மை அரசவைக் - கண் வந்திருந்த அரசர்களை, மனைபுக விடுத்து - அவரவர்கள் மனைக்குச் செல்ல விடுத்து, மாலை - இரவில், கொற்ற வேலவன் - வெற்றி வேலேந்தியயசோதரன், தன் கோயில் - தனது அந்தப் புரத்தேயுள்ள, குளிர்மணிக் கூடம் ஒன்றில் - குளிர்ந்த சந்திரகாந்தக்கல் பதிக்கப் பெற்ற ஒரு கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த, சுற்றுவார் திரையின்-சுற்றிலும் நீண்டதிரைகளை உடைய,தூமம் கமழ் - நறும் புகையின் வாசனை  வீசுகின்ற,  துயில் சேக்கை  துன்னி - பள்ளியணையை அடைந்து,  கற்றைவார் கவரி வீச - கவரிமான் மயிர்த் தொகுதியினால் ஆகிய  சாமரையை பெண்கள் வீச,  களி சிறந்து -  காமக்  களிப்பு மிகுந்து,  இனிது இருந்தான் - தன்மனைவியின்  வரவு நோக்கி  இனிதிருந்தான்.

      யசோதரன்  பஞ்சணையைச் சார்ந்து இன்புற்றிருந்தன னென்க.

      மாலை - மாலைக்  காலமுமாம்.  கோயில்  - அரண்மனை.கூடம் - அறை,  குளிர்மணி - சந்திரக்காந்தக் கல்.  (துயில்) சேக்கை - துணியாலும் பஞ்சாலு மியற்றியது.           (16)

அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்

89. சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்
  கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப
  நலம்கவின்1 றினிய காமர் நறுமலர்த் தொடைய  லேபோல்
  அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய  ணைந்தாள்.

     (இ-ள்.) சிலம்பொடு சிலம்பி - சிலம்பின் ஒலியோடு ஒலித்து, தேனும் -தேன் கூட்டங்களும், திருமணி வண்டும் - அழகிய நீலமணி  போலும் வண்டினங்களும்,  பாட-ரீங்காரம் செய்ய,  கலம்பல -பலவித ஆபரணங்களோடு, அல்குல்  அணிந்த - இடையிலணிந்த, கலை ஒலி - மேகலை

 

1 கவன்று.