யின் ஒலியும், கலவி ஆர்ப்ப - சேர்ந்து
ஒலியிட, நலம் கவின்று -அழகு மிகப்பெற்று, இனிய காமர் நறுமலர்த் தொடையலே போல்
- இனிய அழகான வாசனைவீசும் பூ மாலை வருதல் போல, அலங்கல் அம்குழல் - பூமாலை
அணிந்த
அழகான கூந்தல், பின்தாழ - பின்புறம் தாழ்ந்து அசைய, அமிழ்த முன் மதி அணைந்தாள்
- அமிர்தமதி யசோதரன் இருந்த பள்ளியணையை அடைந்தாள். (எ-று.)
அமிர்தமதி சயன அறையை கலன் முதலியன தாழ, பாட, ஆர்ப்ப,
தொடையால் போல அணைந்தாளென்க.
சிலம்புதல் - ஒலித்தல், அல்குல்
- அறை; இடை. கலை-மேகலை, அமிர்தம் என்ற பதத்திற்கு முன்னாலுடைய மதி - அமிர்தமதி.
கவின்று -அழகுபெற்று; ‘புறவுங் க வி ன் று‘ (பெருங் - 2.4-745) என்றது காண்க.
நடந்து செல்வதால் மாலையிலுள்ள மதுவுண்ண இயலாத வண்டு ஒலித்தலியல்பு.
(17)
இருவரும் இன்பம் நுகர்தல்
90. |
ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக்
குரிசி றந்த |
|
பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந்
தலைப்பப் புல்லி |
|
நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு
மொருவ ராகித் |
|
தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர்
திளைத்துவிள்ளார். |
(இ-ள்.)
ஆங்கு - அவ்விடத்திற்கு, அவள் அணைந்த போழ்தில் -அவ்வமிர்தமதி வந்து சேர்ந்த
போது, ஐங்கணை - ஐந்துவகை மலர் அம்புகளை உடைய, குரிசில் - மன்மதன், தந்த - விடுத்த,
பூங்கணை மாரிவெள்ளம் - மலரம்பு மழையின் வெள்ளம், பொருது வந்து அலைப்ப - மோதி
வந்து தாக்குதலினால், (யசோதரன் அவளை), புல்லி - தழுவி, ஒருவர் உள்புக்கு இருவரும்
ஒருவராகி - இருவரும், ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் மாறிப்புகுந்து ஒன்றுபட்டு, நீங்கலர்
- இணை பிரியாதவர்களாகி, தேம்
|