(இ-ள்.)
மண்ணினுக்கு அரசன் தேவி - அவந்தி நாட்டரசன் தேவியும், பண்ணினுக்கு ஒழுகும் நெஞ்சின்
பாவை -இசைக்கு உருகி ஒழுகுகின்ற நெஞ்சோடு கூடியபாவை போன்றவளுமாகிய அமிர்தமதி,
இப்பண் கொள் -இப்பாடல் பொருந்தியுள்ள, செவ்வாய் - சிவந்த வாயை யுடைய, அண்ணலுக்கு
அமிர்தம் ஆய - பெருமையிற் சிறந்தோனுக்கு அமிர்தம் போலினிக்கின்ற, அரிவையர்க்கு
- பெண்கட்கு, உரிய -உரிமையாகத் தருகின்ற, போகம் - இன்ப நுகர்ச்சி, விண்ணினுக்கு
- தேவருலகத்தே, உளது - உளதாகும், என்று எண்ணி - என்று நினைத்து, வெய்து உயிர்த்து
- பெருமூச்செறிந்து, உய்தல் செல்லாள் - பிழைக்க வகையறியாது, மதிமயக்குற்றிருந்தாள்
- அறிவு கலங்கப் பெற்றிருந்தாள். (எ-று.)
பாவை போன்ற தேவி, அண்ணலுக்குரிய பெண்கள் நுகரும்
போகம், தேவருலகத்தே உளதாகும் என்றெண்ணி அது கிடைக்கப் பெறாமையில் வருந்தின
ளென்க.செல்லான் என்பது முற்றெச்சம்.
(22)
பெண்மையின் புன்மை
95. |
மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின்
விழைந்த யாவுந |
|
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு
மொழிய நிற்கும் |
|
பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர்
பெருமை பேணா |
|
என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய
மாயி னாளே |
(இ-ள்.)
பெண் உயிர்-பெண்ணாய்ப் பிறந்த உயிர்கள், மின்னினும் நிலையின்று உள்ளம் - மின்னலைக்
காட்டிலும் நிலையில்லாததாகிய தம் மனம், விழைவுறின் - (எவற்றை யேனும்) விரும்பினால்,
விழைந்த யாவும் துன்னிடும் - விரும்பிய வெல்லாவற்றையும் பெற்றே தீரும், மனத்தின்
தூய்மை சூழ்ச்சியும் ஒழிய நிற்கும் - உள்ளத்தின் தூய்மையும் ஆராய்ச்சியும் கெடுமாறு
நிற்கும், பின் உறுபழியிற்கு அஞ்சா- |