- 154 -

அவன் சாதியும் (உனக்குத்) தகுந்ததன்று ; அவன் வயின் தளரும் உள்ளம் - அவனிடத்து நெகிழ்ந்த உள்ளத்தை  நீ தவிர்ந்திட்டு - நீ நீக்கிவிட்டு, நெஞ்சில் - நின் மனத்தில் நிறையினை - கற்பினை, சிறை செய்க -கட்டுப்படுத்துக (நிலை நிறுத்துக) என்றாள் - என்று கூறினாள் (எ-று.)

குணவதி, ‘தேவியே, அவன்பால் சென்ற எண்ணத்தை விட்டு, நின்மனத்தைச் சிறைசெய்து கற்பினை நிலை நிறுத்துக‘  என்றா ளென்க.

சிறை -தடை (சீவக. 710)  நிறை -கற்புநிறை. கோது -குற்றம்.  அது, அரசியை இசைபாடியவன்பாற் சேர்க்க உடன்பட்டது.                     (33)

அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத்

தோழிக்குக் கூறல்

106. என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம
  சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும
  ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ1 டெல்லாம்
  நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ

(இ-ள்.) என்றலும் - என்று குணவதி கூறியதும், (அதனைக் கேட்ட அமிர்தமதி), ‘இறைவளை - முன்கையில் வளையலை உடையவளே, இவற்றினால் என் - இக்குற்றங்களால்  நேருந் தீமை என்ன? அவன்கண் - அவனிடத்தில், ஆர்வம் - (என்) காதல், முன்னே - முன்னேதாகவே, சிறந்து சென்றது - மிகுந்து சென்றுவிட்டது; திருவொடு -செல்வமும், திறலும் - வலிமையும், தேசும்-ஒளியும்.  ஒன்றிய அழகும் - பொருந்திய அழகும், கல்வி - கல்வியும், ஒளி அமைகுலத்தோடு - புகழுடைய உயர்குலமும்,  எல்லாம் நின்று-இவையெல்லாம் நிலைபெற்றிருந்து,  செய் பயன்-செய்-கின்ற பயன், நல்லார் நெஞ்சம் பெறுதல் அன்றோ-மகளிர் நெஞ்சினைப் பெறுதல் தானே?‘ (எ-று.)

 

1 குலனோ..