- 155 -

அரசி தோழியை நோக்கி ‘திரு முதல் குலம் ஈறாகக் கூறப்பட்ட இவற்றின் பயன் மகளிருள்ளத்தை வயப்படுத்துத லன்றோ? என் நெஞ்சை அவன் தன் இசையினால் கவர்ந்துவிட்டான்.  அவனிடத்தில் இவை இல்லாதிருப்பதனால் குறை யென்ன?'; என்றான்.

மகளிர்மனம், ‘செல்வம்... குலம';  இவற்றைப் பெற்றவனிடமே சென்று சேர்தல் இயல்பு.  ஆயினும், அவற்றுள் ஒன்றும் இல்லாத அஷ்டபங்கன்பால் அமிர்த மதியின் ஆர்வம் அணுகிச் செறிந்தது என்றால்,  அது பழ- வினைப்பயனே யாகும்.  ‘ இவற்றினால'; என்றது ’பூதிகந்தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா,  சாதியுந் தக்க தன்றால்‘ (யசோ 105.) என்ற குற்றங்களையும் சுட்டும். ‘அவன்கண்'; என்றது, செல்வம் முதலிய இவ் வாறையும் பெற்றிலாத அவனிடத்து என்றும் பொருள்படும்.  பயன், நெஞ்சம் இவற்றிலுள்ள உம்மை இரண்டும் இசைநிறை.               (34)

107. காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல்
  காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன்
  ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக்
  நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள்.

(இ-ள்.) ‘நேர்இழை-அழகான ஆபரணங்களைஅணிந்தவளே, காரியம் முடிந்த பின்னும் - தொழிற்பயன்  முடிவெய்திய பின்னரும், காரணம் முடிவு காணல் இது - காரணத்தின் முடியை ஆராயப்புகுதலாகிய இது,  காரியம் அன்று என்று - செய்யத் தகுவதன்று என்று, கருதிடு -கருதுவாயாக; கடவுள் காமன் - காமனாகிய கடவுள்,  நமக்கு ஆர்உழை அருளைச் செய்யும் - எவன்பால் நமக்கு அருள்புரிகின்றானோ,  அவன் அனையன் ஆக நினைந்து -அவனையே அக் காமக்கடவுளாக நினைந்து, நீடலை போகி - தாமதமின்றிச் சென்று,  இது முடி என்றாள் - இதனை முடித்துவை‘  என்றாள்.  (எ-று.)