மன்னன், ‘ஏகலுற்ற
இவளுயிர் அரிதினில் மீண்டது‘என்று அசதி யாடி அவளைப் பிரிந்து பெருமூச் செறிந்து தனித்திருந்தானென்க.
புரைபரை தோறும்-மலரிதழ்களின் ஒவ்வோரடுக்குக்களிலுமுள்ள
தொளைதோறும் என்க. ஏகலுற்றது என்பதனை இவளுயிர் என்பதனோடுகொண்டு கூட்டி, ஏகலுற்றதாகிய
இவளுயிர் என்றும் கூறலாம். வெய்துயிர்த்தனன், முற்றெச்சம். (53)
மன்னன்,
தாயிடம் சேறல்
" |
ஆயிடை யரச னுள்ளத் தரசினை விடுப்ப வெண்ணித் |
|
தாயமர் கோயி லெய்திச் சந்திர மதிதன் முன்னர்ச் |
|
சேயிடை யிறைஞ்ச மற்றித் திரைசெய்நீ ருலக மெல்லாம |
|
நீயுயர் குடையின் வைகி நெடிதுடன் வாழ்க வென்றாள்." |
(இ-ள்.) ஆயிடை - அச்சமயத்தில், அரசன் (வெய்துயிர்த்திருந்த)
அரசன், உள்ளத்து -(தன்) மனத்தில், அரசினை - தன் அரசாட்சியை, விடுப்ப - விட்டுத்துறக்க,
எண்ணி - கருதியவனாய், தாய அமர் கோயில் - தாய் தங்கியிருந்த அரண்மனையை, எய்தி
- அடைந்து, சந்திரமதிதன்முன்னர் -சந்திரமதி என்னும் பெயருடைய அவளுக்கு எதிரில்,
சேய்இடை இறைஞ்ச -சேய்மைக்கண்ணே நின்று வணங்க, திரைசெய்நீர்உலகம் எல்லாம் -
அலையினுடையகடல் சூழ்ந்த இவ்வுலகம் முழுவதும், உயர் குடையின் வைகி-சிறந்த வெண்கொற்றக்
குடையின் நீழலில் தங்கியிருக்க, நீ -, நெடிது உடன்வாழ்க என்றாள் - நீண்ட காலம்நின்
அரசியலோடு வாழ்க என்று ஆசி கூறினாள். (எ-று.)
அரசன், அரசைத் துறக்க எண்ணித் தாயிடம்சென்று வணங்க. அவள் வாழ்த்தினா ளென்க.
வைகி என்பது எச்சத் திரிபு. பெரியாரிடைச் செல்வோர் சேய்மையில்நின்று வணங்குதல்
மரபு. இதனை, ‘ஐவிலி னகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு‘(சீவக. 1704) என்ற
திருத்தக்கதேவர்வாக்கானு மறிக
|