- 173 -

உறவின் முறையாரை உடன்படச் செய்துகொண்டுதுறவுக்குச் செல்லுதல் மரபாதலின், ‘அரசினை விடுப்ப வெண்ணித் தாயமர் கோயிலெய்தி... இறைஞ்ச‘ என்றார்.

ஏறு, சிங்கம் என்னுஞ் சொற்கள் சிறந்தவன் என்றுகுறிக்கும்.           

சந்திரமதி ஐயுறல்.

127.     மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா
  வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ்
  பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய
  துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று.
 
[சொன்னாள்.

   (இ-ள்.) அணி முடி அரசர் ஏறே -அழகிய முடியை யுடைய அரசர்களுள் சிறந்தவனே,  ஐய-ஐயனே, தோன்றல் - மைந்தனே, மணிமருள் உருவம் வாடி - மாணிக்கம் போன்ற நிறத்தையுடைய சரீரத்தினது ஒளி குறைந்து, வதன பங்கயமும் மாறா - தாமரைமலர் போன்ற முகமும் மாறி, அழகு அழிந்து உளது - (உனது)அழகுகெட்டிருக்கின்றது,  இது என் கொல் - இதற்குக்காரணம் யாது? எனது நெஞ்சில் - எனது மனத்தே,(நின்வாட்டம்), பிணி என - ஏதோ பிணிபோலும் என்று, பெருநவை உறுக்கும் - பெரியதோர் துன்பத்தைத்தருகின்றது.  துணியலென் - தெளிய முடியாதவளாய் இருக்கின்றேன்.  நீ --, உணரச் சொல்வாய் - அவ்வாட்டத்தின் காரணத்தை யான் உணரும்படி உரைப்பாயாக,என்று சொன்னாள் --, (எ-று.)

சந்திரமதி யசோதரனைப் பார்த்து, ‘நின் உருவம்வாடி, வதனம் மாறி, அழகு அழிந்து உளது; அதன் காரணம் யாது? என்றாளென்க.

இனி, பிணியென எனது நெஞ்சிற் பெருநவையுறுக்கும்  என்பதற்கு, நோயைப்போல எனது நெஞ்சிற்பெரிய துன்பத்தை யுண்டாக்கு மென்றும் உரைக்கலாம்.