- 179 -

அடிப்படையாகக் கையாளும் உத்தம குலத்தில் பிறந்து தூய எண்ணமும் செயலும் உடையவனாதலின்,   ‘இது புதிதென்று நெஞ்சில் தாங்கலன்‘ என்றார்.  ஆகலின், ‘தகுபலி‘என்று தாய் (131-ல்) கூறியதை மறுத்து, வேறு கூறுகின்றான் என்பார், ‘தகுவன செப்புகின்றான்‘ என்றார்.  அருள்செய்தது - கூறியது; உயர்வைக் குறித்துவந்தது.       (60)

133.  என்னுயிர் நீத்த தேனும்1 யானுயிர்க் குறுதி சூழா
  தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின்
  என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய்
  மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ2 தான்.

   (இ-ள்.) இறைவி - --, என் உயிர் நீத்தது எனும் -என் உயிரைக் கொல்லத் தீங்கிழைத்த தாயினும்,  யான் -அரசனாகிய யான், உயிர்க்கு-அவ்வுயிர்க்கு,   உறுதி சூழாது - உறுதி பயப்பனவற்றைக் கருதாமல், என் உயிர்க்கு  அரணம்நாடி - என் (ஒருவன் ) உயிர்க்குமட்டும் பாதுகாவலைத்தேடிகொண்டு, யான் - யானே, உயிர்க்கு - (என்னால் காக்கப்படவேண்டிய) பிற வுயிர்க்கு, இறுதி செய்யின் - முடிவு செய்வேனேயானால் (கொல்வேனாயின்), எனக்கு - --, இனி இவ்வுலகு காவல் என்னை -இனிமேல் இவ்வுலகத்தைக்காப்பது எங்ஙனம் அமையும் ! மண்மேல் - நிலவுலகில், மன்உயிர்க்கு - நிலைபெற்ற உயிர்களுக்கு, அரணம்-பாதுகாப்பவர், மன்னவர் அல்லரோ - அரசரே யல்லரோ?கூறாய் - நீயே ஆலோசித்துக் கூறுவாயாக. (எ-று.)

எல்லா வுயிர்களுக்கும் காவலனாகிய யானே என்பொருட்டுப்  பிறஉயிரைக் கொல்வேனாயின் நான் இவ்வுலகத்துக்குக் காவலனென்பது என்னாம் என்று கூறினா னென்க.

    “மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயின்,  அன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலாம்” என்னுஞ் சூளாமணிச் செய்யுளும், “தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி, தின்னுயிர்  நீக்கும்

 

1 வேணு 

2 அல்லவோ