கொடான்
என்ற எண்ணத்தால், ‘வேலோய் மனத்திதுமதித்து‘ என்றாள். அத் தெய்வம் துர்த்தேவதையாயிருப்பினும்
பெண்பாலாதலின் இலகுவில் இரங்கும் என்பதைக்
கருதி, ‘தகுபலி கொடுப்பத் தடுத்தனள்காக்கும்‘ என்றாள். தடுத்தனள், முற்றெச்சம்.
(59)
மன்னன்
நெறியறிந்து கூறல்
132. |
ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந் |
|
தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி |
|
ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி
தென்று நெஞ்சில் |
|
தாங்கல னுருகித் தாய்முன் தகுவன
செப்பு1 கின்றான். |
(இ-ள்.) ஆங்கு - அவ்வாறு, அவள் - சந்திரமதி,அவண் - அவ்விடத்தில்,
அருள் ஒன்று இன்றி - அருள் சிறிதுமின்றி, மொழிந்திடுதலோடும்-சொல்லியவுடனே, அரசன்
-யசோதரன், தேங்கலன் - தாமதியாமல், செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி -
(தன்) சிவந்த கைகளை இரு காதுகளிலும் இறுகப் பொத்திக்கொண்டு, ஈங்கு - இவ்வாறு,
அருள் செய்தது - தாங்கள் உரைத்தருளியது, என் கொல் - என்னே? இது புதிது என்று --,
நெஞ்சில்தாங்கலன்
உருகி - மனத்தில் சகியாதவனாகி இளகி, தாய்முன் - --, தகுவன - தக்க சொற்களை,
செப்புகின்றான் - மறுமொழி கூறுகின்றான். (எ-று.)
அவள் அருளின்றி மொழிந்திட, அரசன் செவிபுதைத்துக் கூறுகின்றானென்க.
அரசன் ‘எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்மனத்தானாம், மாணா செய்யாமை தலை‘ என்று
தேவர் கூறிய நீதி யறிந்தவனாதலின், தாய் புதிதாக உரைந்த தீயசெயலுக்கு அஞ்சி, மேலும்
கேட்க விரும்பாது தன் காதுகளை இறுகப் பொத்தினான். தேங்குதல் - ஈண்டுத்தாமதித்தல்.
தீமொழி கேட்கவிடாது செவியைச் செறிதலின், ‘செங்கை‘ என்றாரென்றுமாம். அஹிம்ஸையை
|