- 177 -

பணியில்-(மாரியின் பாதங்களில்) வணங்கினால், மெய்ப்பலி - அவ்வுடற்பலியை, நெஞ்சில் ---, கொண்டு - ஏற்றுக்கொண்டு, விரும்பினள் உவக்கும் - மிக மகிழ்வாள்,என்றாள்--,(எ-று.)

மகனே, தேவிக்குப் பலியிட்டு வணங்கினால் ஏற்றுமகிழ்வாள் என்று தாய் கூறினாள் என்க.

மதியம்; அம்-சாரியை.  கைப்பலி-சிறு பலியுமாம்;கை-சிறுமை;கைக்குடை, கையேடு என்பத போல.காளி வீரமகளாதலின், அவள் திருவடி “கழலடி” எனப்பட்டது.  விரும்பினள்,முற்றெச்சம்.(58)

131.  மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே
  கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே
  சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல
  கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு1 மென்றாள்.

(இ-ள்.) மண்டு அமர் தொலைத்த - நெருங்கிய போரை வென்றொழித்த, வேலோய் --, இது - யான் கூறுமிதனை, மனத்து மதித்து-(உன்) மனத்தில் உறுதியாக எண்ணி, நின் கொற்றம் வாளின்-உனது வெற்றி வாளினால், நீயே --, கொண்டு - கொண்டுபோய், குறுமறி ஒன்று - ஆட்டினது இளங்குட்டி யொன்றை,  கொன்று ---,சண்டிகை மனம் - சண்டமாரியின் உள்ளம்,  தளிர்ப்ப - மகிழுமாறு, தகுபலி கொடுப்ப - (அவளுக்குத்) தக்க உயிர்ப்பலியாகக் கொடுத்தால், தையல் - அந்தப் பெண்தெய்வம், கண்ட நின் கனவின் திட்பம் - நீ கண்ட நின் கனவினது (தீமையின்) வலியினை, தடுத்தனள் காக்கும் - தடுத்து(உன்னைக்) காப்பாற்றுவாள், என்றாள்- --, (எ-று.)

வேலோய், தேவிக்கு நீயே பலியிட, அதனை ஏற்று நின்னைக் காப்பாள் என்றாளென்க.

தங்கள் மரபில் பலியிடுந் தீய வழக்க மில்லாதிருக்கநூதனமாகக் கூறுகின்றாளாதலின், அவ்வுரைக்கு மதிப்புக்

 

1 கார்க்கு.