- 176 -

தேவியை நற்கு-நன்றாக,  பரவி பணிந்தனை சிறப்புச் செய்தால்-துதித்து வணங்கி விழாவியற்றினால், அத்தீமையெல்லாம் - இனி நேரிட விருக்கும் அத் தீங்குகள் யாவும், விரவி மிக்கிடுத லின்றி - கலந்து மிகாவண்ணம், விளியும்-அழியும், என்றாள்--(எ-று.)

(இறைவி) மைந்த, அஞ்சல்.  தேவி கட்டுரைத்திட்டது.சிறப்புச் செய்தால் அத்தீமையாவும் விளியும் என்றாளென்க.கட்டுரைத்திட்டது,  ஒரு சொல் நீர்மைத்து ஏது-வடசொல் அஞ்சல், வியங்கோள்.  இறைவி, சண்டமாரியெனினுமாம். பணிந்தனை, முற்றெச்சம்.

இவ்வரசி, உயர்குலத்தில் பிறந்து உண்மைக் கடவுளைபூஜிப்பவளாயினும், சண்டமாரியைப் பரவிப்பணிந்தால் அத்தேவியால் பணிந்தாரின் துன்பம் விலகு  மென்று(சிறுதெய்வங்களை வழிபடும் மக்கள்) கூறும் அறியாமையை நம்பினவளாதலின் பரவி நற்கிறைவி  தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால் விரவி மிக்கிடுதலின்றி விளியுமத் தீமை யெல்லாம்‘  என்றாள்.  ‘தீதகல்கடவுளாக‘ என்ற 149 -ஆவது கவியிலும் இக்கருத்து வருவ தறிக.‘எல்லாம்‘ என்றது, ‘நோவு செய்திடும்‘  என்ற கவியில்கூறியதெனலாம்.     (57)

130.  ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின்
  மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்
  கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை
  மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு
 
(மென்றாள்.

(இ-ள்.) (அரசி) காளை - இளையோய், ஐப்பசி மதியம் - ஐப்பசி மாதத்து, முன்னர் பக்கம் - பூருவ பக்ஷத்து,அட்டமி தன்னில் - அஷ்டமி திதியில்,  மைப்படல் இன்றிநின்ற - குற்றமில்லாது நிலவும், மங்கலக் கிழமைதன்னில் -செவ்வாய்க்கிழமை யன்று, கைப்பவி கொடுத்து-பிறரையேவாது  நின்கையினாலேயே உயிர்ப்பலி ஈந்து, தேவிகழலடி