- 175 -

யாகவும் உருவகப் படுத்திக்கொண்டு, தாயிடம் கனவெனக்கட்டுரை கூறினானென்க.  இதனை, ‘குமுதம் மலர்தற்குக் காரணமான சந்திரனுடைய காந்தி, சந்திரனை விட்டு நீங்கிப் பூமியிலுள்ள அந்தகாரத்துடன் சேர்ந்தாற்போல‘

என்னும் பொருள் தோன்ற (சமஸ்கிருத சுலோகம் இல்லை) என்று வாதிராஜர் கூறியதனாலும் அறியலாகும்.  ‘விண்வழுக்கி வந்து வீழ்ந்ததோர்கயிலணிக்கதிர் நகைக்கடவுள்'; என்று (சீவக. 276) திருத்தக்க தேவர் கூறியது ஈண்டு ஒப்ப நோக்குக அமிர்தமதியைப்போலவே அன்னையையும் துறக்கக் கருதினானாகலின், ‘அன்னாய';  என்று அன்போடழைக்காமல், ‘இறைவி'; யென இயம்பினானென்க.மரணத்திற்கும் அஞ்சாத பெரியோர் மானத்திற் கஞ்சுவராகலின், ‘ஈர்ந்திடுகின்ற'; தென்றான்.

தீய செயலைத் தன்கண்களால் காண நேர்ந்ததைக் குறித்து, ‘கண்ணிடைக் கண்டதுண்டு'; என்றான். ‘வாயாற் சொலல'; என்றாற் போல.             (56)

உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு

சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்

129.  கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா
  இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த
  பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால
  விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம்

(இ-ள்.) இறைவி - அரசி, மைந்த - மைந்தனே, இரவினில்-, கனவு - (நீ கண்ட) கனவு,  தீமைக்கு ஏது என்று- தீமையைப் பயப்பதற்குக் காரணமாகு மென்று, அஞ்சல் - அஞ்சற்க, தேவி-சண்டமாரி என்னும் தேவதை, தீமை-(இனி நினக்கு நேரவிருக்குந்) தீமையை,கரவினில்-மறைவாக, கட்டுரைத்திட்டாது-உரைத்திட்ட உரையாகும் இது.  என்னா-என்று கருதி, தேவி - அத்