யிடல்
நலன் என்றதும், அதனால் அத்தேவி நமக்கு வரவிருக்குந் துன்பங்களைத் தடுத்துக் காக்கும்
என்றதும் நோக்கியதாகும். கண்டாய், முன்னிலையசை. (63)
மன்னனை
மாக்கோழி பலியிடப் பணித்தல்
136. |
என்றலு மெனது சொல்லை யிறந்தனை
கொடியை யென் |
|
சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி
பிறிது கூறுங் (றே |
|
கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை
மாவிற் செய்து |
|
சென்றனை பலிகொடுத்துத் தேவியை
மகிழ்வி யென்றாள். |
(இ-ள்.)
என்றலும் - என்று(யசோதரன்) கூறுதலும், சிந்தைக் திருவிலி - மனத்தில் நன்மை யில்லாதவளானசந்திரமதி,
என்து சொல்லை இறந்தனை -என் சொல்லைக்கடந்துவிட்டாய்; கொடியை - கொடியவனானாய்,
என்று - என்று
கூறி, முனிவு சென்றனள்-கடுங் கோபங் கொண்டு,பிறிது கூறும் - பின் வருமாறு வேறொன்று
கூறுவாள். (நீ) உயிர் கொன்று களைதல் அஞ்சில் - உயிர்ப்பலியிட அஞ்சினாயாயின்,
கோழியை- --, மாவின் செய்து - அரிச மாவால்
செய்து, சென்றனை-(தேவிகோயிலுக்குச்) சென்று, பலிகொடுத்து- --, தேவியை - மாரியை,
மகிழ்வி - சந்தோஷப்படுத்து, என்றாள் - என்று சொன்னாள். (எ-று.)
திருவிலி,
என் சொல்லை மீறினாய் என்று முனிந்து, பின், மாவினால் கோழி செய்து பலியிட்டுத்
தேவியை மகிழ்வி என்றா ளென்க.
கொடியை என்பது, முன்னிலை ஒருமைச் சொல்.தனயன் உரைத்த
தகவுரை தனக்குப் பொருந்தாமையாலும், தன் சொல்லைத் தட்டினா னாதலாலும், தாய் அவன்
மேல் சினமூண்டு, ‘கொடியை‘ என்றாள். திரு - ஆக்கந்தருவது; நன்மை. சென்றனை, முற்றெச்சம். (64)
137. |
மனம்விரி
யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக் |
|
கனவுரை பிறிது
தேவி கட்டுரை பிறிதொன் றாயிற் |
|
றெனைவினை
யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால் |
|
வினைகளின்
விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான். |
|