- 189 -

வீழ்வாள் - அனலைப்போலத் துன்பந்தரும் நரகத்துவீழ்வாளாகிய அவள், ஏது செய்தாள் - என்ன கொடு்ஞ்செயல் செய்தாள் ! காண்மின். ( எ-று.)

மகனை அரசியலில் வைத்து வனஞ் செல்லக் கருதிய மன்னனுக்கு, தேவி கொடிய சதி செய்வாளாயினா ளென்க.

படர்தல், செல்லுதல்.  ‘நரகத்து வீழ்வாளாகிய தேவி‘ என்றும் இயைக்கலாம்.  வீழ்வாள்,  வினையாலணையும் பெயர்.                             (71)

144.  அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே
  விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும்
  அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால்
  அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள்.

மேல் (இ-ள்.) விரை செய் தார் இறைவ - மணங் கமழும் மலர்மாலை யணிந்த தலைவனே, அரச - அரசனே, அரசு நீ துறத்தியாயின் - தாம் அரசபாரத்தைத் துறப்பீராயின், எனக்கும் - அடிச்சியாகிய எனக்கும், அஃதே - அத்துறவே, அமைக - அமைவதாகுக; என் வியன் மனை -எனது பெரிய மனையில், இன்று - இன்றைக்கு, நீ மைந்தனோடும் - நீர் நம் மகனோடு, அமுது கைக்கொண்டருளுதற்கு உரிமை செய்தால் - உணவினை ஏற்றருளுதற்கு அன்பு செய்தால், அடிகள் - --, அரசு - அரசுரிமையை, அவனதாகநாம் விடுதும் - அவனுக்கு உரித்தானதாக (நாம்) விடுவோம்,என்றாள் - என்றியம்பினாள்.

மன்னன் உணவு கொள்ளும்படி அரசி வேண்டினாளென்க.

அவனதாக இடுதும் என்றும் பிரித்துப் பொருள்கூறலாம்,  அடிகள் உயர்வு குறிக்குஞ் சொல்; (சீவக.1873, 2099).                              (72)

145.  ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும்
  வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே
  தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான்
  தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே.