- 190 -

(இ-ள்.) ஆங்கு - அப்பொழுது, அவள் அகத்துமாட்சி - அமிர்தமதியின் மனத்து  இழிநிலையினை, அரசன்   --, அறிந்தனன் ஏனும் - (நன்கு) அறிந்திருந்தானாயினும், வீங்கிய முலையினாய் - --, நீ வேண்டியது அமைக -நீ விரும்பிய வண்ணம் ஆகுக, என்று -என்று கூறி, தாங்கலன் - (மனத்தில் அவள் செயலைத்) தாங்கப் பெறாதவனாகி, அவள் மனை - அமிர்தமதியின் அந்தப்புரத்தில், அவ்வைதன்னோடு - தன் தாயோடு, அமர்ந்தான் - (உணவு உட்கொள்ள) அமர்ந்தான்; தீங்கு அது குறுகில் - தீங்கு தரும் தீவினை உதயமாகில், தீய நயமும் - (பிறர் கூறும்)  நயவஞ்சகமும், நன்னயம் அது ஆம் - சிறந்த நீதியாகக் கருதப்படும். (எ-று.)

அரசியின் எண்ண மறிந்த மன்னனும் தீவினையால் மயங்கி உணவு ஏற்க இசைந்தா னென்க.

ஆங்கு என்பது, காலத்தையும் இடத்தையும் காட்டும் இடைச்சொல், மாட்சி, குறிப்பு மொழி. அரசன், அமிர்தமதியின் எண்ணம் அறிந்தவ னாயினும், ‘புத்தி; கர்மாநுஸாரிணீ‘ (க்ஷத்ர) என்ற ஆன்றோர் வாக்கின்படி அவள் விருப்பத்திற்கு உடன்பட்டா னென்க.          (73)

146.  நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக
  எஞ்சலி லட்டு கங்க1 ளிருவரு மருந்து கென்றே
  வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள்
  சொடு படாத2 தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.

(இ-ள்.) வஞ்சனை வலித்து - (அமிர்தமதி தன்காரியம் முடிக்க) வஞ்சனையை மேற்கொண்டு, தேனின் நறுஞ்சுவை பெரியவாக  - தேனைக்காட்டிலும்  இனிய சுவையில் மிக்கனவாக, நஞ்சொடு கலந்த - --, எஞ்சல்இல்லட்டுகங்கள் - குறைவில்லாத இலட்டுக்களை,  இருவரும் அருந்துக என்று - இருவீரும் உண்க என்ற சொல்லி, மாமி  தன்னுடன் வரனுக்கு - தன் மாமிக்கும் மணாளனுக்கும், ஈந்தாள் - அளித்தாள்;  நஞ்சொடு படாத -நஞ்சொடு

1 லட்டு வங்க.

2 படரத்