அறம் - இல்லறம் துறவறம் என இருவகை. அவற்றுள், இல்வாழ்வான்,
இல்லாள், பிரமசாரி முதலியோர் ஏற்று ஒழுகும் அறம் இல்லறம் எனவும்: க்ஷுல்லகன் (யசோ.
27) யதி, ஆரியாங்கனை முதலியோர் ஏற்று ஒழுகும் அறம் துறவறம் எனவும் கூறப்படும். இச்செய்யுளில், ‘நறுமலர்... மகிழ்ச்சி' என்றது துறவறத்தினை நோக்கியதாகும். இல்லறத்தினை அடுத்த
செய்யுளில் கூறுகின்றார். இதனை, ‘இல்லறம் ஏனைத் துறவறம’ என்றும், ‘குறைந்ததூஉ முற்ற நிறைந்ததூஉமாக, வரைந்தார் ஒழுக்க
மிரண்டு‘என்றும், ‘நிறைந்த திருடிகட் காகும் மனையவர்க்கு ஒழிந்தது’ என்றும் (அருங். 60,. 63, 64ல்) கூறியிருப்ப தறிக.
236. |
பெருகிய கொலையும் பொய்யும் களவோடு
பிறன்ம னைக்கண் |
|
தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற்
றிருகு பற்றும்1 |
|
மருவிய மனத்து மீட்சி வதமிவை
யைந்தோ டொன்றி |
|
ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத2
லொழுக்க மென்றான். |
(இ-ள்.)
பெருகிய கொலையும் - பொறிகள் பெருகிய (இயங்கும் உயிர்களைக் கொல்லும்) உயிர்கொலையும்,
பொய்யும் -பொய்யுரைத்தலும், களவொடு -களவு செய்தலும், பிறர் மனைக்கண் தெரிவு இலாச்
செலவும் - பிறர்மனையாளிடம் செல்லும் அறிவில்லாத செலவும், பொருள்வயின் -பொருளிடத்தே,
சிந்தை திருகு பற்றும் - மனத்தில் உண்டாகும் மாறான கடும்பற்றும் ஆகிய இவ்வைந்திலும்.
மருவிய மனத்து மீட்சி - பொருந்திய மனத்தை அவற்றின் நின்றும் மீட்டலாகிய, வதம்
இவை ஐந்தோடு - இந்த அணுவிரதம் ஐந்தனோடு, ஒருவின புலைசு தேன் கள் - புலாலுண்ணாமை
தேனுண்ணாமை கள்குடியாமை ஆகிய மூன்றுடனும், ஒன்றி - பொருந்தி ஒழுகுதல் - --, ஒழுக்கம்
என்றான் - நல்லொழுக்கம் என்றார். (எ-று.)
கொல்லாமை முதலிய இவை எட்டும் நல்லொழுக்கமென்றாரென்க
|