- 268 -

பாராட்டுதற்கு என்க. உள்ளுதல் - நினைத்தல். முகம் - முதலது வாய்: பின்னது முன்பு என்ற பொருளது.  ‘ ஈன்றாள் முகத்தேயு மின்னாதால்‘ (குறள். 923).  (30)

250. சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும்1
  நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச்
  சில்லறி வினக2 ளேனுந் திருவறப் பெருமை யாலே
  வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே.  

  (இ-ள்.) அவன் -அம்மன்னன், வாங்கி - (வில்லை) வளைத்து, சொல் அறிகணையை - ஒலிவந்த திசையை அறிந்தேகும் அம்பினை, தொடுத்து - (அந்த வில்லில்)  தொடுத்து, விடுத்தலோடும் - எய்யவும், நல் இறை பறவை  தம்மை அடுத்து - அழகிய சிறகுகளையுடைய கோழிகளை யடுத்து, நடுக்கியது வீழ - (அவற்றை) நடுங்கச் செய்து வீழ, சில் அறிவின ஏனும் - சிற்றறிவினை யுடைய கோழிகளாயினும் திருஅறப் பெருமையாலே - (அகம்பனரருளிய) திருவறத்தை மேற்கொண்ட பெருமையினால், வல்லிதின் மறைந்துபோகி -விரைவாக (த்தம் உடலினின்றும்) பிரிந்து சென்று, மானுடம்பு ஆய - மக்கட் பிறவியன ஆயின (மக்கட் பிறப்பையடைந்தன). (எ-று.)

மன்னன் எய்ததும் கோழிகள் இறந்து மானிடப் பிறப்பை அடந்தனவென்க.

சொல் அறி கணை - சப்தவேதிபாணம்.  வாங்கி -அம்பை எடுத்து எனினுமாம்.  இறை  - சிறகு.  அறிவனகள்:கள், அசை, உயிர் துறந்ததும் ஒன்றுமுதல் நான்கு சமயத்திற்குள் (கார்மண) சூட்சும சரீரத்துள் மறைந்து சென்றுமறு பிறவியை எய்துதலால், ‘வல்லிதின் மறைந்துபோகி‘ என்றார். ‘ஏகம் த்வௌ த்ரீந் வா அநாஹாரக:‘ என்ற தத்த்வார்த்த சூத்ரத்தின் உரையினால் இதன் விவரம் அறியலாகும். கோழிகள் தருமத்தியானத்துடன் (யசோ. 147 -உரை).  மரித்தனவாதலின் மக்களாயின.  ‘மானுடம்பு‘

 

1

விடுத்தலோடு.
2 சில்லறிவினைக